Homeசெய்திகள்ஆவடிஆவடி அருகே 1 ரூபாய்க்கு பிள்ளையாரை முண்டியடித்து வாங்கி சென்ற பொதுமக்கள்

ஆவடி அருகே 1 ரூபாய்க்கு பிள்ளையாரை முண்டியடித்து வாங்கி சென்ற பொதுமக்கள்

-

வணிகத்தில் சில்லறை விற்பனையை அதிகரிக்கும் வகையில், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆவடி அருகே 1 ரூபாய்க்கு வணிக சங்கத்தினர் பிள்ளையார் சிலை வழங்கினர்.

செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் சிறிய வடிவிலான மண் பிள்ளையார் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம். அதன் பிறகு அருகில் உள்ள நீர்நிலைகளில் வீட்டில் உள்ள நபர்கள் களிமண் பிள்ளையாரை கொண்டு போய் கரைப்பது வழக்கம்.
இந்த நிலையில், ஆவடி அருகே மூர்த்தி நகரில், ஆவடி திருவள்ளூர் தமிழ் சங்க பேரவை சார்பில், ஒரு ரூபாய்க்கு பிள்ளையார் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

avadi

கடந்த மூன்றாம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நாளொன்றுக்கு நூறு டோக்கன் விதம், மூன்று நாட்களுக்கு 300 டோக்கன் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று அந்த டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு, விநாயகர் சதுர்த்தி ஒட்டி களிமண்ணாலான பிள்ளையார் 1 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனை தமிழ்நாடு அனைத்து வணிக சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் ரவி பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்த ஒரு ரூபாய் பிள்ளையாரை பெறுவதற்கு 300 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், சுமார் 500 பேருக்கு மேல் குவிந்து பிள்ளையார் வாங்கி செல்ல ஆர்வம் காட்டினர். குறிப்பாக பிள்ளையார் வழங்கப்பட காரணம் வணிகத்தில் நாணயம் புழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பொதுமக்கள் அதிக அளவில் செய்வதால், வணிகர்களுக்கு ஏற்படும், சில்லறை தட்டுப்பாட்டை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சில்லறையாக ஒரு ரூபாய் பெற்றுக் கொண்டு பிள்ளையார் வழங்கப்படுவதாக ஏற்பாட்டளர்கள் தெரிவித்தனர்.

சந்தை, கடைகளில் 50 ரூபாய்க்கு மேல் வரை விற்பனை செய்யப்படும் களி மண்ணாலான பிள்ளையார் சிலைகளை, 1 ரூபாய்க்கு விற்பனை செய்தது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

MUST READ