பொதுமக்கள் குடங்களில் கொண்டு வந்த கழிவு நீரை நகராட்சி வாசலில் கொட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவேற்காடு நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன.இதில் 10 வார்டு பகுதியில் கால்வாய் அமைக்கும் பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளது.அதேபோல் சாலைகளும் முறையாக அமைக்கப்படவில்லை.இது குறித்து நகராட்சியில் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகரமன்ற கூட்டத்தில் கால்வாய் மற்றும் சாலை அமைக்க ஒப்புதல் அளித்து பொருள் வைத்தும் நகராட்சி ஆணையர் திட்டமிட்டு அதனை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பெண்கள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கையில் பதாகையுடன் திருவேற்காடு நகராட்சியை முற்றுகையிட்டனர், அப்போது திடீரென குடத்தில் கொண்டு வந்த கழிவு நீரை நகராட்சி வாசலில் கொட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனால் நகராட்சி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசியது,இதையடுத்து நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷா மற்றும் நகர அமைப்பு ஆய்வாளர் விக்னேஷ்வரன் ஆகியோர் மக்கள் பணி செய்ய லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள் ஆணையர் திட்டமிட்டு தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி செய்து தரவில்லை என புகார் கூறுகின்றனர், மேலும் கால்வாய்கள் தோண்டப்பட்டு 9 மாதத்திற்கு மேல் ஆகியும் கால்வாய் அமைக்காததால் திறந்து கிடக்கும் பள்ளத்தில் விழுந்து இதுவரை 5 பேருக்கு கை,கால்,எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது,தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவு நீர் தேங்கி டெங்கு,மலேரியா, காலரா போன்ற நோய் தொற்றும் ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர்.
இதனிடையே மக்கள் போராட்டத்தை கண்டும் வெளியே வராத ஆணையர் அலுவலகத்தில் புகுந்த மக்கள் தங்கள் பகுதிக்கு ஏன் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கேட்டு கடும் வாக்குவதாத்தில் ஈடுபட்டனர்.மேலும் எம்.எல்.ஏ,அமைச்சருக்கு தரவேண்டும் என அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் ஏன் கேட்கின்றிர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் செய்வது அறியாத தவித்த ஆணையர் உடனடியாக காவல்துறைக்கு போன் செய்து காவல்துறையினரை வரவழைத்தார்.பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இருந்த போதிலும் மக்கள் பணியை செய்து தரும் வரை நகராட்சி விட்டு செல்ல மாட்டோம் என 2 மணி நேரமாக நகராட்சி முன்பு அமர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொதுமக்களின் இந்த போராட்டத்தில் நகராட்சியில் அன்றாடம் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.