ஆவடி காவல் ஆணையரகம் எல்லையில் கடந்த 6 மாதத்தில் திருடுப்போன 1.8 கிலோ தங்கம் , 1.1கிலோ வெள்ளி, 507 செல்போன்களை மீட்டு பொருட்களை பறி கொடுத்தவர்களிடம் ஆணையர் சங்கர் ஒப்படைத்தார்.
ஆவடி மாநகரில் கொலை கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் மட்டுமின்றி நில அபகரிப்பு, இணைய வழி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் குண்டாஸ் பாய்ந்துள்ளதாக ஆணையர் தகவல்.
ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட 27 காவல் நிலைய எல்லையில் உள்ள மக்கள் நேரடியாக காவல் ஆணையரை சந்தித்து புகார் மனுக்களை அளிக்கும் குறைதீர் முகாம், போலிஸ் கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. இதில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவற்றை சம்பந்தபட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் விசாரித்து தீர்வு காணும்படி உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதத்தில் ஆணையரக எல்லையில் கொள்ளை, திருடு போன நகைகள் மற்றும் செல்போன் ஆகியவை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆவடி காவல் ஆணையர் சங்கர், மீட்கப்பட்ட1.8 கிலோ தங்கம் ,1.1 கிலோ வெள்ளி மற்றும் 507 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். சைபர் கிரைம் மோசடி குற்றங்களில் 35 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டு கொடுத்துள்ளனர்.
ஆவடி காவல் அணையரகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து முறையில் உதவி செய்வதற்கு முயற்சி செய்வதாக ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த வருடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் 208 பேருக்கு கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, குறிப்பாக கொலை அடிதடி திருட்டு மட்டுமின்றி நில அபகரிப்பு வழக்கில் 30 பேர்,இணைய வழி பண மோசடியில் ஈடுபட்ட 3 பேர் என குண்டாசில் அடைக்கபட்டுள்ளதாக ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆவடி : சுறாவளிக் காற்றில் பறந்த பேனர்கள் – வாகன ஓட்டுனர்கள் மீது விழுந்திருந்தால் என்ன ஆயிருக்கும்?