ஆவடி அருகே மின்வாரிய அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20சவரண் தங்க நகைகள், 2லட்சம் ரொக்கம் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்கள், சத்தம் கேட்டு வீட்டின் அருகாமையில் இருப்பவர்கள் வந்ததை அடுத்து தப்பி ஓடிய திருடர்களால் பரபரப்பு.
ஆவடி அடுத்த திருநின்றவூர் தென்றல் நகரை சேர்ந்தவர் நேதாஜி வ/52. இவர் ஆவடியை அடுத்துள்ள மிட்டன மல்லி மின்வாரியத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 10ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மைசூரில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக குடும்பத்தினருடன் சென்றுவிட்டார். இதற்கிடையில் இன்று அதிகாலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில், வசித்து வந்த மதுரவாயல் உதவி ஆய்வாளர் கோபால் எழுந்து வந்து பார்த்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த திருடர்கள் சுவர் ஏறி குதித்து ஓடி உள்ளனர். இது குறித்து உடனடியாக கோபால் நேதாஜிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மைசூரில் இருந்து வீட்டிற்கு வந்து சோதனை செய்தபோது பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் இரண்டு லட்சம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து நேதாஜி திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா உதவியுடன் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஆவடி அருகே மின்வாரிய அதிகாரி வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.