Homeசெய்திகள்ஆவடிசூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து தானியங்கி சமிக்ஞைகள்

சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து தானியங்கி சமிக்ஞைகள்

-

 சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து தானியங்கி சமிக்ஞைகள் துவக்கி வைத்த ஆவடி காவல் ஆணையர்

சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து தானியங்கி சமிக்ஞைகள்

விபத்தில்லா ஆவடி காவல் ஆணையரகத்தை உருவாக்கும் முயற்சியில் அம்பத்தூர் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக ZF தனியார் நிறுவன உதவியுடன் அம்பத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில் புதியதாக அமைக்கப்பட்ட சூரிய சக்தியால் இயங்கக்கூடிய போக்குவரத்து சமிக்ஞைகள் ஆவடி காவல் ஆணையர் சங்கர் மற்றும் ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் ஜெயலட்சுமி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து தானியங்கி சமிக்ஞைகள்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்தது ஆவடி காவல் ஆணையரகத்தில் சாலை போக்குவரத்து விதிகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதற்கான முயற்சிகளை சி எஸ் ஆர் மற்றும் தனியார் நிறுவன உதவியுடன் புதிய சூரிய சக்தியால் இயங்கக்கூடிய சிக்னல்களை பொருத்தியுள்ளோம் மேலும் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதற்கான விழிப்புணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டு வருகிறோம்.

சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து தானியங்கி சமிக்ஞைகள்

இதனைத் தொடர்ந்து மணலி பகுதியில் கண்டெய்னர்கள் செல்வதற்கான புதிய வழித்தடத்தை அமைத்து கொடுத்து இருக்கிறோம் மேலும் சாலை விழிப்புணர்வு குறித்தும் விபத்தில்லா பயணங்கள் மேற்கொள்ள ஆவடி காவல் ஆணையரகம் தொடர்ந்து அனைத்து நடவடிக்கையும் எடுத்து செயல்பட்டு வரும் என தெரிவித்தார்…

MUST READ