அசைவ உணவகங்களில் திடீர் சோதனை தொடரும் – உணவு பாதுகாப்பு அதிகாரிகள்
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவின்பேரில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அறிவுறுத்தலின்படியும் ஆவடி மாநகராட்சி பகுதியில், சவர்மா விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பாஸ்புட், அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் போது சுமார் 10 கிலோ அளவில ஷவர்மா சிக்கன், செயற்கை வண்ணம் கலந்த சுமார் 20 கிலோ சிக்கன் வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
நாளை முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் ரோவர், லேண்டர்!
இனிவரும் காலங்களில் செயற்கை வண்ணம் சிக்கன் உணவு வகைகளில் சேர்க்கக்கூடாது என அறிவுறுத்தி அறிவிப்பு வழங்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் பயன்பாட்டுக்காக ரூபாய் 4,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த திடீர் ஆய்வு இனிவரும் காலங்களில் தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது.