ஆவடி அருகே ஸ்ரீ மத் ராமானுஜம் கைங்காரியா டிரஸ்ட் சார்பாக 20ஆம் ஆண்டு திருப்பதிக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்க நடை பாதை யாத்திரை துவங்கியது.
ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமத் ராமானுஜ கைங்கார்ய டிரஸ்ட் சார்பாக 20 ஆம் ஆண்டு திருப்பதி திருக்குடை பாதயாத்திரை துவங்கின.
இந்த திருக்குடை திருப்பதி மலைக்கு நடை பாதையாக ஆண்டுதோறும் செல்வது வழக்கம் அதன் ஒரு பகுதியாக 20ஆம்ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருநின்றவூர் தனியார் திருமண மண்டபத்தில் இருந்து ஸ்ரீமத் ராமானுஜம் கைங்காரியா டிரஸ்ட் சார்பாக நடைபாதை துவங்கியது.
இந்த பாதயாத்திரையில் திருக்குடைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வெங்கடேச பெருமாள் அலங்கரிக்கப்பட்டு வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவார்.
இந்த சாமி ஊர்வலத்தின் போது கிருஷ்ணர் பஜனை பாடல் மேலம் தாளம் ராதாகிருஷ்ணன் போன்ற வேடமிட்டும் கண்ணன் பாடலுக்கு குழந்தைகள் ரங்கோலி நடனம் ஆடியும் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று முழங்கியும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபாதையாக பெரியபாளையம் ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி திருமலை கோவிலுக்கு சென்றடையும் இந்த நடைபாதை யாத்திரையில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களும் ராமானுஜ பக்தர்களும் திரளாக நடைப்பயணம் மேற்கொண்டனர்.