Homeசெய்திகள்ஆவடிசிறார் ஆபாச படங்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை - ஆணையர் சங்கர்

சிறார் ஆபாச படங்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை – ஆணையர் சங்கர்

-

சிறார் ஆபாச படங்கள் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்த இணையவழி குற்றப்பிரிவு போலிசார்.

சிறார் ஆபாச படங்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை - ஆணையர் சங்கர்இனிவரும் காலங்களில் சிறார் ஆபாச படங்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை பாயும் என ஆணையர் சங்கர் எச்சரிக்கை.

சிறார் ஆபாச வீடியோக்களை இணையத்தில் இருந்து இறக்குமதி செய்து பார்ப்பதோ பகிர்வதோ குற்றம் எனவும் மீறினால் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த நிலையில் டெலிகிராம் செயலியில் சிறார் ஆபாச படங்களை விற்பனை செய்யப்படுவதாக ஆவடி காவல் ஆணையர் சங்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சிறார் ஆபாச படங்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை - ஆணையர் சங்கர்அதன் அடிப்படையில் இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரவின் குமார், சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரனை மேற்கொண்டனர். அதில் மணலி அடுத்த சின்ன சேக்காடு பகுதியை சேர்ந்த பிரசாந்த் (24) என்ற இளைஞர் சிறார் ஆபாச படங்களை 99 படங்கள் ரூ-100/-க்கும், 250 படங்கள் ரூ-150/-க்கும், 1000 ரூ-200க்கும் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்தது தெரிய வந்தது.

சிறார் ஆபாச படங்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை - ஆணையர் சங்கர்உடனடியாக பிரசாந்த் என்பவரை கைது செய்த ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீசார் சிறார் ஆபாச படங்களை விளம்பரம் செய்ய பயன்ப்படுத்திய இரண்டு செல்போன்களை கைப்பற்றி பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் சிறார் படங்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

MUST READ