- Advertisement -
ஆவடி அருகே ராணுவ வீரர் வீட்டில் திடீர் தீ விபத்து
ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகரில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பாலசுப்ரமணியம் . பாலசுப்ரமணியம் குடும்பத்தினர் வெளியூர் சென்று இருந்த நிலையில் வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் தகவல் அளித்ததின் பேரில் சம்பவயிடத்திற்கு வந்த தீயனைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த வீட்டை தண்ணீர் பாய்ச்சி தீயை அனைத்தனர்.
இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த கட்டில், பிரோ, டிவி முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இந்த விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்காலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வெளியூரில் உள்ள பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் வந்த பின்னர்தான் முழுமையான சேதமதிப்பு தெரிய வரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.