ஆவடியில் திடீரென்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்
ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து ஆவடி செக்போஸ்ட் வழியாக பூந்தமல்லி செல்லும் வழியில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் மற்றும் மார்க்கெட் பகுதி வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மார்க்கெட் பகுதியில் வாகனங்கள் ஆமை போல் நகர்ந்து கொண்டிருந்ததால் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த போக்குவரத்து நெரிசல் சுமார் ஒரு மணி நேரமாக தொடர்ந்தது.
போக்குவரத்து துறை காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர நீண்ட நேரம் ஆகியது. வார இறுதி நாள் என்பதால் பணி முடித்து புறநகர் பகுதிகளுக்கு வெளியூர் செல்பவர்கள் பேருந்துகளிலும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் பயணிப்பதால் இந்த போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திடீரென்று ஏற்பட்ட இந்த போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்.