Homeசெய்திகள்ஆவடிஆவடி அருகே 75ஆவது குடியரசு தினத்தில் தனியார் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஆவடி அருகே 75ஆவது குடியரசு தினத்தில் தனியார் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

-

- Advertisement -

ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் உள்ள எஸ் ஏ பொறியியல் கல்லூரியில் 20வது முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் 75வது குடியரசு தின விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

ஆவடி அருகே தனியார் கல்லூரியில் 20வது முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில் 20வது முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் குடியரசு தின விழா தெய்வத்திரு த. சுதர்சனம் அவர்களின்  நல்லாசியுடன் இனிதே நடந்தேறியது. இவ்விழாவில் கல்லூரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதனுடன் குடியரசு தின விழா மாணவர்கள் பேரணியுடன் தொடங்கியது.  கல்லூரி தாளாளர் திரு சு. அமர்நாத் அவர்கள் கொடியேற்றிவைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் மாணவர்கள் கொடிப் பாடலைப் பாடினார்கள். இறுதியாக நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

ஆவடி அருகே தனியார் கல்லூரியில் 20வது முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி (ALUMNI MEET) தொடங்கியது. வெவ்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிருந்தும், நாடுகளிருந்தும் 500க்கும் மேற்ப்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. பின்னர் முன்னாள் மாணவர்கள் குத்து விளக்கேற்றி சிறப்புச் செய்தனர்.

ஆவடி அருகே தனியார் கல்லூரியில் 20வது முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் முதல்வர் திரு எஸ். இராமச்சந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.  நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் திரு சு. அமர்நாத் அவர்கள் AI தொழில்நுட்பத்தினால் வரும் நன்மைகள் தீமைகள் பற்றியும் மற்றும் மாணவர்கள் எவ்வாறு வேலைக்கு தகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் உரையாற்றினார். சில முன்னாள் மாணவர்கள் மேடையேறி தங்களது கல்லூரியின் மகிழ்ச்சியான தருணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொணடனர்.  அடுத்து கல்லூரியின் செயலாளர் திரு த. தசரதன் அவர்கள், முன்னாள் கல்லூரி மாணவர்களின் சந்திப்பின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார்.  இந்நிகழ்ச்சியை கணினி அறிவியல் துறை பேராசிரியர் முனைவர் சி. பாலகிருஷ்ணன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.

ஆவடி அருகே தனியார் கல்லூரியில் 20வது முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த சந்திப்பு மாணவர்களுக்கு அனைத்து வகையான நலன்களை கொண்டுவந்து பழைய நண்பர்களுடன் புதிய உறவுகளை உருவாக்குவதாக அமைந்தது.

MUST READ