புதிதாக கட்டப்பட்ட மாநிலங்களவை மற்றும் மக்களவை கட்டிடத்தில் கூடுதல் இருக்கைகளை அமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இதனால் தான் தற்போது முதல் தாக்குதலை எடுத்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என-திராவிடர் கழக பிரச்சார குழு செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி விளக்கம் அளித்துள்ளார்.
அம்பத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், ”1967ல் டெல்லி தமிழ்நாட்டிற்கு போட்ட பூட்டை இன்று வரைக்கும் உடைக்க முடியாமல், செருப்பில்லாமல் சாட்டையை அடித்துகொண்டு திரிகிறார் அண்ணமாலை. நீ சாட்டையை அடித்துக் கொண்டே திரிய வேண்டியதும், நடந்து கொண்டே இருக்க வேண்டியதும் தான். அடுத்த 2026 தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்றும் கூறிக்கொண்டு உள்ளார்.
25 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டும். 1950ல் அரசியல் அமைப்புச் சட்டம் வந்தது அதற்கு பிறகு 1975 இல் அப்பொழுது இந்திரா காந்தி அம்மையார் அவசர சட்டம் கொண்டு வந்த பிறகு, 1976 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எம்.பி-களை மாற்ற வேண்டுமா, குறைக்க வேண்டுமா? கூட்ட வேண்டுமா? என்ற கேள்வி வரும்பொழுது வீண் பிரச்சனை வரும் என மீண்டும் 25 ஆண்டுக்கு தள்ளிப் போட்டனர்.
மீண்டும் 25 ஆண்டு முடிந்து 2002-ல் அப்போது பாஜகவினர் ஆட்சியில் இருந்தார்கள். 2002-ல் வந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி குறைப்பது கூட்டுவது மீண்டும் பிரச்சினை எழுந்தது. அதனால், மீண்டும் 25 ஆண்டுக்கு தள்ளி வைத்து 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் இந்த தொகுதிகள் மறுபடியும் கணக்கிடப்படும் என்று மீண்டும் அரசியல் சட்ட திருத்தம் வந்தது.
அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ளது. அதில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்து ஒரு சட்டத்தை நிறைவேற்றம் செய்தார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து 2026 ல் இந்த தொகுதியெல்லாம் மறு கணக்கீடு செய்யும்போது பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்போம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் எப்படி 2026-ல் நடைமுறைக்கு வரும்.
முதலில் இருந்த பாராளுமன்றம் பிரிட்டிஷ் கட்டிடம் மிகவும் அழகாக இருந்தது. இவர்கள் சத்திரம் ஒன்று கட்டி வைத்துள்ளார்கள். அதை பார்த்தாலே இந்த ஊர்களில் தர்மசத்திரம் போல பெறியதாக இருக்கும். இதற்கு பரதேசி மடம் என்று பெயர். உண்மையில் அங்கு பரதேசிகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது நோக்கம் ஆகும்.
அவர்களுக்கு மக்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை எம்பியாக கொண்டு வர முடியாது. கும்பமேளா சாமியார்களை போன்றவர்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து அமர்த்த வேண்டும் என பாஜகவின் நோக்கம் அதற்கேற்றார் போல் புதிய கட்டிடத்தை கட்டிவைத்துள்ளார்கள்.
மக்களவைக்கு 550 இருக்கை தேவை. ஆனால் அவர்கள் கட்டி வைத்திருப்பது 888 இருக்கைகள். மாநிலங்களவைக்கு 254 இருக்கை உள்ள இடத்தில் 380 இருக்கை போடப்பட்டுள்ளது. மாநிலங்களவைக்கு இது எல்லாம் செய்து வைத்துவிட்டு தான் அறிவிக்காமல் முதல் தாக்குதலை எடுத்து விட்டார் தமிழ்நாட்டில் முதலமைச்சர்.
தமிழ்நாடு அரசு இந்திய மக்கள் தொகை கட்டுப்படுத்தலை ஒழுங்காக பின்பற்றி நாம் இருவர் நமக்கு இருவர். நாம் இருவர் நமக்கு ஒருவர் என்கிற அளவுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து மக்கள் தொகையை குறைந்து உள்ளோம், இதனால் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்றால் உங்களுடைய மதிய பிஜேபி ஆட்சி 1976 லே அமண்ட்மெண்ட் வந்தபொழுது 2002 ல் சட்ட திருத்தம் வந்தபோது நீங்களே ஒரு சட்ட திட்டத்தை கொண்டு வந்து இப்போது உள்ள தொகுதி மாறாது என்றும் மக்களவையில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
நாங்கள் கொண்டு வர வைக்கிறோம் என தமிழ்நாட்டின் பிஜேபி தலைவர்கள் சொல்வார்களா. கொண்டு வர வைப்போம் என கூறுவார்களா?. திராவிட முன்னேற்றக் கழக தோழர் போய் ஹிந்தியை தார் போட்டு அழித்து வந்தால் இவர்கள் பின்னாடியே மண்ணெண்ணெய் கொண்டு அதை இந்தி வார்த்தை மேல் பூசப்பட்ட தாரை அழித்து வந்தார்கள். அவ்வளவு பெரிய தேச பக்தர்கள் அந்த வேலையைத்தான் இன்றும் பாஜக செய்து கொண்டிருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.