அம்பத்தூர் அருகே 10 அடி ஆழம் கொண்ட கழிவு நீ ர் தொட்டியில் விழுந்த பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த அம்பத்தூர் கல்யாணபுரம் பகுதி பஜனை கோவில் தெருவில் பத்தடி ஆழம் மூன்றடி அகலம் கொண்ட கழிவு நீர் தொட்டியில் பசு மாடு விழுந்து விட்டதாக தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்ததை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறை ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி கழிவு நீர் தொட்டியில் விழுந்த பசுமாடை பத்திரமாக மீட்டனர் 10 அடி ஆழம் கொண்ட கழிவு நீர் தொட்டி சரியாக மூடி அமைக்காததால் இந்த விபத்து நடந்ததாக தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்தனர்.