திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட அன்னை இந்திரா நகர் முழுவதும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. அந்த வகையில் திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட அன்னை இந்திரா நகர், இமெத் நகர், சனிவாச நகர்,சரஸ்வதி நகர் உள்ளிட்ட 2000க்கும் அதிகமான குடியிருப்புகளை வெள்ளமானது இடுப்பு அளவிற்கு சூழ்ந்துள்ளது.
வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வீட்டில் உள்ளேயே முடங்கி உள்ள சூழல் உள்ளது.
வீடு முழுவதும் தண்ணீரால் சூழ பட்ட நிலையில் சிறுவன் முழங்கால் அளவு தண்ணீரில் கடைக்கு வந்து செல்லும் நிலையை பார்க்க முடிகிறது. இதேபோன்று முழங்கால் அளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் வீட்டிலிருந்து பொதுமக்கள் வேலைக்கு செல்கின்றனர். இந்தப் பகுதிகளில் கால்வாய்,சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குடியிருப்புகள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து இருப்பதால் மேடான பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி செல்லும் குடியிருப்பு வாசிகளை பார்க்க முடிகிறது. இப்பொழுது வரை திருநின்றவூர் நகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் கடைகளில் ஷட்டரை உடைக்கும் கும்பலை பிடிக்க போலீசார் திணறல்…!
தொடர்ந்து கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கன மழை பெய்யும் பட்சத்தில் திருநின்றவூர் பெரியார் நகர்,இந்திரா நகர் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டு தீவாக மாறும் அபாயம் உள்ளது. உடனடியாக திருநின்றவூர் அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.