Homeசெய்திகள்ஆவடி"உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டம்- ஆவடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

“உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டம்- ஆவடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

-

"உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டம்- ஆவடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தலைமையில், காலை 9:00 மணி முதல் மறுநாள் காலை 9:00 வரை குறிப்பிட்ட வட்டத்தில் தங்கி,அரசு சேவைகள், நடைபெறும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஆய்வில் பெறப்படும் கருத்துக்கள் அடிப்படையில், மக்களுக்கு மேம்பட்ட சேவை வழங்குதல், திட்டங்கள் விரிவுபடுத்துதல், மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

"உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டம்- ஆவடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்தில், ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் செப்-18ல் துவங்கியது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், கொசவன்பாளையம், லட்சமிப்பதி நகரில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய குளம் அமைக்கும் பணி, குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் இரண்டு வகுப்பறைகள் கட்டும் பணி. திருநின்றவூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நடுக்குத்தகையில் அங்கன்வாடி மையம்,பாலவேடில் புதிய நூலகம் கட்டும் பணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கொள்முதல் நிலையம் ஆகியவற்றை ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார்.

"உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டம்- ஆவடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னையை இணைக்கும் விதமாக, பட்டாபிராம் எல்.சி., 2 ரயில்வே கடவுப்பாதையில், ரூ. 52.11 கோடி மதிப்பில், கடந்த 6 ஆண்டுகளாக கட்டப்படும் மேம்பாலத்தை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

பின் பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறுகையில்..

பட்டாபிராம் மேம்பாலத்தில், சிறிய ஒரு பகுதியை தவிர,மற்ற பணிகள் அனைத்தும் முடிந்துள்ளன. மேம்பாலத்தை விரைந்து திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி,வருகிற செப். 25 ம் தேதி, ஒரு வழிப்பாதையை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்த பின், ரயில்வே கேட் மூடப்பட்டு,மீதமுள்ள பணிகள் ஆறு மாதத்திற்குள் முடிக்கப்படும் என தெரிவித்தார்.

உங்கள் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துகிறார்களா?…. நிச்சயம் இது உங்களுக்காக தான்!

மேலும் ஆவடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை விரைவில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்க்கப்படும் எனவும் ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்தார்.

MUST READ