Homeசெய்திகள்ஆவடிலியோ திரைப்பட டிக்கெட் கிடைக்காததால் திரையரங்கை முற்றுகையிட்ட விஜய் ரசிகர்கள்

லியோ திரைப்பட டிக்கெட் கிடைக்காததால் திரையரங்கை முற்றுகையிட்ட விஜய் ரசிகர்கள்

-

- Advertisement -

ஆவடியில் லியோ திரைப்பட டிக்கெட் கிடைக்காததால் திரையரங்கை முற்றுகையிட்டு விஜய் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லியோ திரைப்பட டிக்கெட் கிடைக்காததால் திரையரங்கை முற்றுகையிட்ட விஜய் ரசிகர்கள்நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது.இத்திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆவடியில் உள்ள மீனாட்சி திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சிக்கான முன்பதிவு துவங்கிய நிலையில் சிறிது நேரத்திலேயே டிக்கெட்கள் விற்று தீர்ந்ததாக கூறப்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் திரையரங்க வாயில் முன்னர் திரண்டனர்.

பின்னர் அவர்கள் கையில் விஜய் உருவம் பொறித்த போஸ்டர்களை கையில் வைத்து டிக்கெட் வேண்டும்,டிக்கெட் வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி போலீசார் ரசிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதன் பின்னர் ரசிகர்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

லியோ திரைப்பட டிக்கெட் கிடைக்காததால் திரையரங்கை முற்றுகையிட்ட விஜய் ரசிகர்கள்இதுகுறித்து ரசிகர்கள் கூறுகையில் ஆவடி மீனாட்சி திரையரங்கில் 600கும் அதிகமான இருக்கைகள் உள்ளது.அதில் பெரும்பாலான டிக்கெட்டுகள் ஆவடி ஆளுங்கட்சி பிரமுகர்கள் வாங்கி வைத்ததாகவும், குறிப்பிட்ட அளவிலான டிக்கெட்டுகள் மட்டுமே ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.மேலும் கூடுதல் டிக்கெட்டுகள் கவுண்டரில் ரசிகர்களுக்கு 1000 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.ரசிகர்கள் படத்தினை காண ஆவலாக இருக்கும் பட்சத்தில் இதில் அரசியல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.இதில் உடனடியாக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

MUST READ