Homeசெய்திகள்ஆவடிமதுரவாயல் தொகுதியில் உள்ள 3 ஊராட்சிகளையும் ஆவடி மாநகராட்சியோடு இணைக்க விட மாட்டோம் - எம்.எல்.ஏ...

மதுரவாயல் தொகுதியில் உள்ள 3 ஊராட்சிகளையும் ஆவடி மாநகராட்சியோடு இணைக்க விட மாட்டோம் – எம்.எல்.ஏ காரம்பாக்கம் கணபதி

-

ஆவடி மாநகராட்சியில் 19 ஊராட்சிகள் 3 நகராட்சிகள் இணைக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில் அயப்பாக்கம் ஊராட்சியை தனி நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மக்கள் கோரிக்கை ஏற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதுரவாயல் தொகுதியில் உள்ள 3 ஊராட்சிகளையும் ஆவடி மாநகராட்சியோடு இணைக்க விட மாட்டோம் - எம்.எல்.ஏ காரம்பாக்கம் கணபதிமதுரவாயல் தொகுதியில் உள்ள மூன்று ஊராட்சிகளையும் ஆவடி மாநகராட்சியோடு இணைக்க விட மாட்டோம் என தொகுதி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடையவுள்ள நிலையில் கிராம சபை  கூட்டமாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராக மதுரவாயல் எம்.எல்.ஏ காரம்பாக்கம் கணபதி கலந்து கொண்டார். கூட்டத்தில் குடிநீர், சாலை, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் குறித்து கோரிகை வைக்கப்பட்டது. பின்னர் ஊராட்சி மன்ற கூட்டத்தில்  அயப்பாக்கம் ஊராட்சியை ஆவடி இணைப்பது குறித்த திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

மிகப்பெரிய ஊராட்சியான அயப்பாக்கம் ஊராட்சியை தனி நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என  ஊராட்சி நிர்வாகம் தரப்பிலும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ கணபதி சென்னையில் அதிக மக்கள் தொகை கொண்ட தொகுதியில் ஒன்று மதுரவாயல் தொகுதி அதேபோல் தமிழ்நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சி அயப்பாக்கம் எனவே இந்த ஊராட்சி மட்டுமல்ல வானகரம், அடையாளம்பட்டு போன்ற 3 ஊராட்சிக்களையும் ஆவடி மாநகராட்சியோடு இணைக்கவிட மாட்டோம்.

அயப்பாக்கம் ஊராட்சி தனி நகராட்சியாக மாற்றுவதே தங்களுக்கு விருப்பம் எனவே இது குறித்து சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். முன்னதாக கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

MUST READ