மகளிர் உரிமை தொகை: ஆவடியில் வீடு வீடாக சென்று விவரங்கள் சரிபார்ப்பு
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள் வீடு, வீடாக சென்று அலுவலர்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை நேற்று வருவாய்த்துறை செயலாளர் ராஜாராம் ஐஏஎஸ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 கோடிக்கு மேல் மகளிரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு செல்போன் வழியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆவடி வட்டத்திற்கு உட்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்து உள்ள விண்ணப்பங்களின் உண்மை தன்மை குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், அலுவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சரிபார்த்து வருகின்றனர்.
விண்ணப்பதாரர் வசிக்கும் வீடு சொந்த வீடா அல்லது வாடகை வீடா என்றும், வேறு ஏதாவது பென்ஷன் பெறுகிறாரா, என்ன வேலை செய்கிறார், வாகனம் வைத்திருக்கிறார்கள் மற்றும் வருமானம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்து விசாரித்தார்.
இந்த நிலையில் நேற்று ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் சரிப்பார்க்கும் பணியை கண்காணிப்பு அதிகாரி ராஜாராம் ஐஏஎஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி, வருவாய் கோட்டாட்சியர் திருவள்ளூர் ஜெயராஜ பவுலின், ஆவடி வட்டாட்சியர் விஜயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், அரசு அதிகாரிகள்.