Homeசெய்திகள்ஆவடிஅம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபன் கைது

அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபன் கைது

-

- Advertisement -

ஆவடி காவல் ஆணையரகத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பின் தொடர் நடவடிக்கையாக இன்று (25.11.2023) காலை 07.30 மணிக்கு, அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர்  C.தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படையினருடன் கொரட்டூர் ரயில் நிலையம் சென்றனர்.  அப்போது இரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் கண்காணித்த போது சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றித்திரிந்த கேரளாவை சேர்ந்த தீபக்– வயது -20 த/பெ சுபாஷ் என்ற வாலிபனை பிடித்து விசாரித்தனர்.

அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபன் கைது

அப்போது அவன் ஒடிசா மாநிலம் சென்று கஞ்சா வாங்கி வந்து கொரட்டூர் மற்றும் அம்பத்தூர் பகுதியில் இருக்கும் வெளிமாநில தொழிலாளிகளுக்கு விற்பதாக தெரிவித்தான். தீபக்கிடம் 4 கிலோ கஞ்சா இருப்பதை தொடர்ந்து  அவனை கைது செய்து அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபன் கைது

மேலும் இது போன்ற சட்டத்திற்கு புறம்பான போதைப் பொருட்கள் விற்பனை செய்வதோ அதற்கு துணை போவதோ சட்டப்படி குற்றம் எனவும், இவர்கள் மீது காவல்துறையால் தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் IPS எச்சரித்தார்.

 

MUST READ