- Advertisement -
கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவியிடம் அத்து மீறிய வாலிபர்,துணிச்சலுடன் செயல்பட்ட மாணவி.
ஆவடி சரஸ்வதி நகர் சம்பங்கி தெருவை சேர்ந்த18 வயது இளம்பெண்.இவர் வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் நேற்று மாலை 4 மணியளவில் வழக்கம் போல கல்லூரி முடிந்து ஜெ.பி எஸ்டேட் அருகே மாணவி தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது போதையில் வந்த ஒரு மர்ம நபர் மாணவியிடம் அத்து மீறி நடந்ததாக கூறபடுகிறது.அதிர்ச்சி அடைந்த மாணவி உடனே அவசர உதவி எண் 100ஐ அழைத்து புகார் அளித்துள்ளார்.பின்பு அவரது தந்தையரிடம் தெரிவித்துள்ளார்.உடனே அவர் தந்தை சம்பவ இடத்திற்கு வந்து மர்ம நபரை பிடித்து ஆவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்,மாணவி வசிக்கும் அதே பகுதி சரஸ்வதி நகரை சேர்ந்த விஜய்(28) என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.