மணிக்கு 10 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. சென்னைக்கான ஆபத்து விலக இன்னும் 40 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
சென்னைக்கு 440 கிமீ கிழக்கு – தென்கிழக்கிலும், புதுச்சேரிக்கு 460 கிமீ கிழக்கு – தென்கிழக்கிலும், நெல்லூருக்கு 530 கிமீ கிழக்கு – தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக கொட்டி வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 10 வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. சென்னைக்கு 440 கி.மீட்டர் தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை கடக்க குறைந்தது 40 மணி நேரம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய் இரவு சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் சென்னையில் மழை பெய்யவில்லை. அந்த நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்தது மக்களுக்கு ஆறுதலாக இருந்தது.