Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் நகை புதுப்பிக்கும் நிறுவனங்களிடம் 10 கோடி மதிப்புள்ள தங்கம் மோசடி - பலே கில்லாடிகளை...

சென்னையில் நகை புதுப்பிக்கும் நிறுவனங்களிடம் 10 கோடி மதிப்புள்ள தங்கம் மோசடி – பலே கில்லாடிகளை தேடிவரும் போலீஸ்

-

சென்னையில் நகை புதுப்பிக்கும் நிறுவனங்களிடம் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மோசடி செய்த பலே கில்லாடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர்,தனது தந்தையுடன் பார்க் டவுன் பகுதியில் ஸ்ரீ ஜோதிர்லிங் டெஸ்டிங் மற்றும் கோல்டு டெஸ்ட் என்ற நிறுவனத்தை 25 வருடங்களாக நடத்தி வருகிறார். இவர் பல்வேறு நகைக் கடைகளுக்கு பழைய தங்கத்தை புதுப்பித்து சுத்த தங்கம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் புளியந்தோப்பைச் சேர்ந்த தனியார் ஜுவல்லரி கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் தீரேந்தர் சிங் மற்றும் பகவான் சிங் இவர்களிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பழைய தங்கத்தை கொடுத்து புதுப்பித்துக் கொண்டு சுத்த தங்கங்களை வாங்கிச் செல்லும் தொழில் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அந்த சுத்த தங்கத்தை நகைக்கடைகளில் விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.அந்த அடிப்படையில் ஆறு மாதமாக இவர்கள் இருவரும் தங்கள் ஜுவல்லரி கடைகளுக்கு தங்கத்தை புதுப்பித்து தர வேண்டும் எனக் கூறி அடிக்கடி ஆயிரக்கணக்கான கிராம் பழைய தங்கத்தை கொடுத்து புதிய தங்கத்தை வாங்கி செல்வார்கள். அந்த வகையில் தொடர்ந்து நம்பிக்கை வரவே ஆகாஷ் முன்கூட்டியே சுத்த தங்கங்களை கொடுத்து பழைய தங்கங்களை பெற்றுக் கொண்டு தொடர்ந்து வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் கடந்த ஜூன் மாதம் வழக்கம் போல் தீரேந்தர் சிங் மற்றும் பகவான் சிங் 1600 கிராம் சுத்த தங்கத்தையும், செலவிற்காக சுமார் ஒரு லட்ச ரூபாய் பணமும் சேர்த்து முன் கூட்டியே வாங்கிச் சென்றதாக தெரிவித்துள்ளனர்.

வழக்கம்போல் காலையில் சுத்த தங்கத்தை வாங்கிச் செல்பவர்கள் ,மாலையில் பழைய தங்கத்தை கொடுத்து அனுப்புவது வழக்கமாக இருந்த நிலையில், வழக்கத்துக்கு மாறாக இருவரும் தங்கத்தை எடுத்து வராததால் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போன் அழைப்புகளை எடுக்காததால் ஆகாஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் வேலை பார்த்ததாக கூறப்படும் கடைக்கு சென்று பார்க்கும் பொழுது பூட்டி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது தன்னைப்போல் பலரும் சுத்த தங்கத்தை கொடுத்து பாதிக்கப்பட்டு ஏமாந்தது தெரியவந்துள்ளது.

காவல் நிலையத்தில் ராபின் பேரா என்பவரிடமிருந்து 1474 கிராமம், சந்திரன் பேரா என்பவரிடமிருந்து 2500 கிராம், ராகேஷ் குமார் மாலி 1340 கிராமம் அனுப்ப பாலிடமிருந்து 1790 கிராமம், என்ன 15க்கும் மேற்பட்டவரிடமிருந்து தங்களைப் போன்று சுத்த தங்கத்தை கொடுத்து ஏமாந்ததது தெரியவந்துள்ளது.

இவ்வாறாக தங்கத்தை புதுப்பித்துக் கொடுக்கும் தங்களைப் போன்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பலரிடம் இருந்து 15,000 கிராமிற்கும் மேலாக சுத்த தங்கத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிச் சென்றது தெரியவந்துள்ளது. இதில் ஏமாற்றிச் சென்ற தீரேந்தர் சிங் மற்றும் பகவான் சிங் ஆகிய இருவரும் வேலை பார்த்த தனியார் ஜுவல்லரி கடையில் இருந்தும் 2000 கிராம் தங்கத்தை ஏமாற்றிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கும்பலை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு பழைய தங்கத்தை வாங்கிக் கொண்டு புதுப்பித்து சுத்த தங்கத்தை தரும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி ஒரே நேரத்தில் மொத்தமாக சுமார் 15 கிலோ அளவிலான தங்கத்தை ஏமாற்றி தலைமறைவானது தெரியவந்துள்ளது. இவ்வாறாக ஏமாற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 10 கோடி ரூபாய் ஆகும். இது தொடர்பாக யானை கவுனி போலீசார் தொடர்ந்து புகார்கள் பெற்று வந்த நிலையில், இந்த தங்கத்தை மோசடி செய்து ஏமாற்றிய கும்பல் குறித்து உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஏமாற்றப்பட்ட தொகையின் மதிப்பு பத்து கோடி என்பதால் வழக்கு சென்னை மத்திய குற்ற போலீசார் அவர்களைப் பற்றி வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திரேந்தர் சிங் மற்றும் பகவான் சிங் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர். ராஜஸ்தானி சேர்ந்த இவர்கள் இருவரும் மேலும் சில பேருடன் சேர்ந்து கூட்டாக இந்த மோசடி முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் அழைப்புகள் ஆய்வு பற்றி பயன்படுத்தி கும்பலை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் மூலம் இன்னும் பலர் தங்கத்தை ஏமாந்து இருக்கலாம் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு இதேபோன்று வடமாநில கும்பல் மாற்றிச் சென்றதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

MUST READ