துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி உணவு மற்றும் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 48 வது பிறந்த தின விழா இன்று திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
திருவொற்றியூர் மணலி விரைவு சாலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் வசிக்ககூடிய சத்தியமூர்த்தி நகர் பகுதியில். 1000 பேருக்கு மத்திய உணவாக முட்டையுடன் கூடிய பிரியாணி உணவை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே. பி சங்கர் வழங்கி உள்ளார். இதில் துப்புரவு தூய்மை பணியாளர்கள் ஏழை எளிய மக்கள் வரிசையில் காத்திருந்து பிரியாணி உணவை வாங்கிச் சென்றனர்.
முதலமைச்சருக்கு எதிராக பா.ம.க… அதானி முறைகேட்டை திசை திருப்பும் முயற்சியா?