Homeசெய்திகள்சென்னைமருத்துவ காப்பீடு அட்டை பெற விரைவில் 100 முகாம்கள் - அமைச்சர் மா. சுப்ரமணியன்

மருத்துவ காப்பீடு அட்டை பெற விரைவில் 100 முகாம்கள் – அமைச்சர் மா. சுப்ரமணியன்

-

- Advertisement -

மருத்துவ காப்பீடு அட்டை பெற விரைவில் 100 முகாம்கள் – அமைச்சர் மா. சுப்ரமணியன்

சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்து பயனாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகளை வழங்கினார்.

மருத்துவ காப்பீடு அட்டை பெற விரைவில் 100 முகாம்கள் - அமைச்சர் மா. சுப்ரமணியன்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மா சுப்பிரமணியன் பேசுகையில்,

இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 1 கோடியே 43 லட்சம் குடும்பங்கள் பயன் பெற்றுள்ளனர். திருமணம் ஆன பிறகு தனியாக வசிப்பவர்களுக்கு, புதிதாக உருவாகும் குடும்பங்களுக்கு காப்பீடு அட்டை புதிதாக வழங்க முகாம்கள் நடத்தப்பட்டது வருகிறது.

அந்த வகையில் இன்று சைதாப்பேட்டையில் 3 இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகிறது. காப்பீடு அட்டை பெறாதவர்களை கண்டறிந்து அட்டை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முகாம்களுக்கு வருவோர்களை அலையவிடக்கூடாது என்பதால் இங்கேயே வருமான சான்றிதழும் தரப்பட்டு, அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவ காப்பீடு அட்டை பெற விரைவில் 100 முகாம்கள் - அமைச்சர் மா. சுப்ரமணியன்

தற்போது இந்த முகாம் சைதாப்பேட்டையில் தொடங்கியுள்ள நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விரைவில் தமிழ்நாடு முழுவதும் 100 தொகுதிகளில் 100 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விடுபட்டு போனவர்கள், அட்டைகளை பெறாதவர்கள், அட்டைகளை தொலைத்தவர்கள் யாராக இருந்தாலும் சிறப்பு முகாம் மூலம் பயன் பெற வேண்டும் என கேட்டுகொண்டார். இந்த திட்டத்திற்காக தற்போதுவரை 1144 கோடியே 28 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் இதுவரை 1,81,860 பேர் பயனடைந்துள்ளனர். இதற்காக 159.48 கோடி செலவிடப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் சிலவற்றில் மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் 40 ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 208 மருத்துவமனைகள் திறக்கப்படாமல் உள்ளது என்றும் ஏற்கனவே சென்னையில் திறக்கப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை என கூறினார்.

ஏற்கனவே காலியாக உள்ள 1021 காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதையெல்லாம் சரி செய்து எம்.ஆர்.பி மூலம் பணியிடங்களில் நிரப்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறிய அமைச்சர் ஏற்கனவே உள்ள 1021 இடங்கள் அல்லாமல் மேலும் புதிதாக 1000 காலி பணியிடங்கள் உள்ளது என தெரிவித்தார்.

மருத்துவ காப்பீடு அட்டை பெற விரைவில் 100 முகாம்கள் - அமைச்சர் மா. சுப்ரமணியன்

கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மதிப்பெண்கள் தர வேண்டும் என்ற வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது. ஏற்கனவே district health society மூலம் கொரோனா காலத்தில பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என 4000 பேருக்கு 20 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

எம்.ஆர்.பி மூலம் பணியில் அமர்த்தப்படுபவர்களும், கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என கேட்கிறார்கள். முதலமைச்சர் மதிப்பெண் தரலாம் என முடிவெடுத்து அந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் காலி பணியிடங்களை நிரப்புவது முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.

MUST READ