கலைஞர் நூற்றாண்டை ஒட்டி மத்திய அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை வெளியிட்டார்.
இது தற்போது அண்ண அறிவாலயத்தில் மக்களின் பார்வைக்கு மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு நூறு ரூபாய் நாணயத்தின் விலை ரூ.10,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரூபாய் பத்தாயிரம் கொடுத்து நாணயத்தை வாங்கி செல்கின்றனர்.