Homeசெய்திகள்சென்னை3 சட்டங்களை திரும்ப பெற கோரி வழக்கறிஞர்கள்  நீதிமன்ற புறக்கணிப்பு

3 சட்டங்களை திரும்ப பெற கோரி வழக்கறிஞர்கள்  நீதிமன்ற புறக்கணிப்பு

-

வழக்கறிஞர்களுக்கு இன்று கருப்பு தினம் மூன்று சட்டங்களை திரும்ப பெற கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பால் வெறிச்சோடிய திருவொற்றியூர் குற்றவியல் உரிமையியல் நீதிமன்றம்

3 சட்டங்களை திரும்ப பெற கோரி வழக்கறிஞர்கள்  நீதிமன்ற புறக்கணிப்புஒன்றிய  அரசு அமல்படுத்தியிருக்கும் மூன்று சட்டங்களால்  வழக்கறிஞர்களுக்கும் வழக்காடிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த பாதிப்பு. காவல்துறையினருக்கு பயிற்சி கொடுக்காமல் சட்ட புத்தகங்களை நீதிபதிகளே படித்து முடிக்காத நிலையில் சட்டங்களை அமல்படுத்திருப்பது குளறுபடியாக உள்ளது வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளை மக்களுக்கு விரோதமான முறையில் ஒன்றிய அரசு  மாற்றியமைத்து, புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

3 சட்டங்களை திரும்ப பெற கோரி வழக்கறிஞர்கள்  நீதிமன்ற புறக்கணிப்புஇவற்றுக்கு  சம்ஸ்கிருத மொழியில் பெயரிட்டு, அதே மொழி தலைப்புகளைத்தான் இந்தியா முழுமையும் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.

ஜூலை 1- தேதி இன்று முதல் அமலுக்கு  வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்கள் திரும்பப் பெறக்கோரி திருவொற்றியூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டு திருவொற்றியூர் குற்றவியல் உரிமையியல் நீதிமன்றங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய  வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுப்பிரமணி

3 சட்டங்களை திரும்ப பெற கோரி வழக்கறிஞர்கள்  நீதிமன்ற புறக்கணிப்புதிருத்தி அமைக்கப்பட்டுள்ள மூன்று சட்டங்களால் கிரிமினல் வழக்குகளில் விசாரணை முடிந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். மேலும், விசாரணை துவங்கி, 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும். இந்திய தண்டனை சட்டத்தில் முன்பிருந்த 511 பிரிவுகள், 358 ஆக குறைக்கப்பட்டுள்ளன.

வழக்கு நடைமுறைகளை விரைவுபடுத்தவும், காகித பயன்பாட்டை குறைத்து, வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் தகவல் பரிமாற்றத்தை திறம்படச் செய்வதற்காக, சம்மன்களை இனி மின்னணு தகவல் தொடர்பு முறை வாயிலாக அளிக்க, புதிய சட்டம் இடமளிக்கிறது.

எப்.ஐ.ஆர்., போலீஸ் ரிப்போர்ட், குற்றப்பத்திரிகை, வாக்குமூலங்கள் உள்ளிட்ட ஆவணங்கள், 14 நாட்களுக்குள் இரு தரப்புக்கும் அளிக்கப்பட வேண்டும்.நீதிமன்றங்கள் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்.

என் மூன்று சட்டங்களையும் மாற்றி அமைத்திருக்கிறார்கள் அதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன என்று தெரிவித்தார்.

மறுபரிசீலனை செய்து  உடனடியாக பாராளுமன்றத்தில் மீண்டும் அதை விவாதத்திற்கு எடுத்து சரி செய்து இந்த சட்டங்களை திருத்தி அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

இந்த சட்டமானது ஒருவருக்கு ஒரு பெயில் போட வேண்டும் எனறால் கூட காவல்துறையினருக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது என  குற்றச்சாட்டை முன் வைத்தனர்.  வழக்கறிஞருக்கு வழக்காடிகளுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது.

காவல்துறையினர்  தவறாக செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளது அதிகமாக  வழக்கறிஞர்களும் பொதுமக்களும் தான் பாதிக்கப்படுகிறார்கள். இந்த சட்டத்தின் மூலம்  காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்கொள்வது என்பது மிகவும் சிரமமாக உள்ளது.

காவல்துறையினருக்கு சாதகமாக இருக்கின்ற இந்த சட்டங்கள் பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய  பாதிப்பு அதிகமாக உள்ளது. காவல்துறையினர் இந்த சட்டம் எப்படி செயல்படுத்துவது என்று தெரியவில்லை.

காவல்துறையினருக்கு முறையான பயிற்சி கொடுக்கவில்லை மற்ற பொது மக்களுக்கும் இதை விளக்கம் கொடுக்கவில்லை இந்த சட்ட புத்தகம் நீதிபதிகளை இதனை படித்து முடிக்கவில்லை.

அப்படி இருக்கின்ற நிலையில் இந்த சட்டத்தை அமல் படுத்துவது என்பது மிகக் கடினமாக இருக்கும். இன்று  வழக்கறிஞர்களுக்கு கருப்பு தினம் அதனால் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட உள்ளோம் உடனடியாக சட்டத்தை நிறுத்தி வைத்து முறை படுத்தி அனைத்து தரப்பினருக்கும் பேசி விவாதித்து முடிவுக்கு வந்தால் மட்டுமே போராட்டம் முடிவுக்கு வரும்  என தெரிவித்

MUST READ