- Advertisement -
செங்குன்றம் அடுத்த அலமாதி பகுதியில் உள்ள சாலையின் தடுப்பில் கார் (வாடகை கார்) மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் அனீஷ் (30) உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு.
திருவள்ளூரில் இருந்து சென்னை சிந்தாதிரிப்பேட்டைக்கு சென்றபோது விபத்து நடந்துள்ளது. காரில் பயணித்த உஷா ராணி (48), அவரது மகள் சாய் மோனிஷா (4) உயிரிழந்தனர். உஷா ராணியின் கணவர் ஜெயவேல் (52), மகன் சாய் மோஹித் (4) ஆகியோர் காயங்களுடன் செங்குன்றம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராட்சசன் பட தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்…. திரையுலகினர் இரங்கல்!
இச்சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.