Homeசெய்திகள்சென்னைவேளச்சேரியில் தாறுமாறாக வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்..!

வேளச்சேரியில் தாறுமாறாக வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்..!

-

வேளச்சேரி 100 அடி சாலையில் தாறுமாறாக வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்.

வேளச்சேரியில் தாறுமாறாக வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்..! சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் அதிவேகமாக தாறுமாறாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரம் நடந்து சென்ற நபர், இரண்டு இருசக்கர வாகனம், ஒரு ஆட்டோ, டிரை சைக்கிளில் இளநீர் கடை நடத்தி வந்த நபரோடு சேர்த்து இடித்து தள்ளியதில் இளநீர் வியாபாரி, இருசக்கர வாகன ஓட்டி, நடந்து சென்ற நபர்கள் என நான்கு பேர் படுகாயமடைந்து இராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேளச்சேரியில் தாறுமாறாக வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்..!அதிவேகமாக காரை இயக்கி விபத்து ஏற்படுத்திய திருவொற்றியூரை சேர்ந்த பிரகதீஷ் என்பவரை கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்தில் ஒரு ஆட்டோ, இரண்டு இருசக்கர வாகனம், டிரை சைக்கிள் உள்ளிட்டவை சேதமாயின.

MUST READ