Homeசெய்திகள்சென்னைஆகஸ்ட் 18ம் தேதி வரை 55 மின்சார ரயில்கள் ரத்து

ஆகஸ்ட் 18ம் தேதி வரை 55 மின்சார ரயில்கள் ரத்து

-

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம் ரயில்வே பணிமனையில் கடந்த கடந்த 23-ம் தேதி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மிக்ஜாம் புயலினால் சென்னையில் காலை 8 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

இந்த நிலையில்,  புறநகர் மின்சார ரயில்கள் ரத்து மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 18ஆம் வரை கடற்கரை – தாம்பரம் – கடற்கரை மற்றும் கடற்கரை – செங்கல்பட்டு – கடற்கரை இடையேயான 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

MUST READ