Homeசெய்திகள்சென்னைசென்னை நந்தனத்தில் 75ம் ஆண்டு திமுக பவள விழா கொண்டாட்டம்

சென்னை நந்தனத்தில் 75ம் ஆண்டு திமுக பவள விழா கொண்டாட்டம்

-

திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை நந்தனத்தில் 75ம் ஆண்டு திமுக பவள விழா கொண்டாட்டம்பேறிஞர் அண்ணா பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள், திமுக தொடங்கிய நாள் ஆகிய மூன்று விழாக்களையும் ஒன்றாக சேர்த்து ஆண்டு தோறும் செப்டம்பர் 17 ஆம் தேதி முப்பெரும் விழா கொண்டாடுவது வழக்கம்.

திமுக தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடிடும் வகையில் பவள விழாவும் இந்த ஆண்டு முப்பெரும் விழாவுடன் இணைத்து கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறக்கட்டளை சார்பாக, தமிழகத்தில் உள்ள ஒன்றியம் நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் கட்சியில் சிறப்பாக செயல்பட்ட ஒருவருக்கு பணமுடிப்பு வழங்கபடுகிறது.

சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் இந்த விழா, கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் இந்த விழா நடைபெறுகிறது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்புரையும், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு வாழ்த்துரையும்  வழங்குகின்றனர்.

இந்த ஆண்டிற்கான திமுக விருதுகள் பெறுவோர் விவரம்:

விருது – விருத்தாளர், பெரியார் விருது – பாப்பம்மாள், அண்ணா விருது – அறந்தாங்கி மிசா ராமநாதன், கலைஞர் விருது – எஸ்.ஜெகத்ரட்சகன், பவேந்தன் விருது – கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது – வி.பி.ராஜன் ஆகியோர் ஆவர் . இந்த ஆண்டு முதல் மு.க.ஸ்டாலின் விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை நந்தனத்தில் 75ம் ஆண்டு திமுக பவள விழா கொண்டாட்டம்இந்நிலையில், எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் இந்த விருதினை பெறுகிறார். விருத்தளர்களுக்கு விருதுகள் வழங்கிய பின்னர் திமுக தலைவரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

MUST READ