அம்பத்தூர் அருகே நாட்டின் 78-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மூவர்ண உடை அணிந்து இந்திய நாட்டின் வரைபடம் வடிவில் நின்று அசத்தினர்.
இந்தியாவின் 78வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. முக்கிய சின்னங்கள் மூவர்ண்ண நிறத்தில் ஜொலிக்க உள்ளது.
இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ள அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டின் 78வது சுதந்திரதினத்தினை கொண்டாடும் விதமாக 200க்-கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்திய தேசிய கொடியின் மூவர்ண்ண நிறத்தில் உடையணிந்து இந்திய வரைபட வடிவில் நின்று சுதந்திர தினத்தை போற்றும் வகையில் கொண்டாடினர்.
மாணவ, மாணவிகள் தங்களுடைய தேசப்பற்றினையும், தேசத்தின் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் விதமாகவும் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில், கல்லூரி செயலாளர் என்.ஆர்.டி பிரேம்குமார், துணை செயலாளர் பி.ஈ.ஆர் பிரேம் சந்த், கல்லூரி முதல்வர், துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.