Homeசெய்திகள்சென்னைஓட்டுநர் வங்கிக் கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.9000 கோடி

ஓட்டுநர் வங்கிக் கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.9000 கோடி

-

ஓட்டுநர் வங்கிக் கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.9000 கோடி

சென்னையில் கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.9 கோடி வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கோடம்பாக்கத்தில் வசிக்கும் ராஜ்குமாருக்கு கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 3 மணிக்கு வங்கிக் கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட் என தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் குறுஞ்செய்தி வந்துள்ளது. வங்கிக்கணக்கில் ரூ.15 மட்டும் இருந்த நிலையில், 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் வந்ததால் ராஜ்குமார் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக நண்பருக்கு ரூ.21,000 பணத்தை ஆன்லைன் மூலம் ராஜ்குமார் அனுப்பியுள்ளார். அடுத்த நொடியே மூதமுள்ள பணத்தை டி.எம்.பி வங்கி திரும்ப எடுத்துக் கொண்டது.

ரூ.9,000 கோடி தவறுதலாக டெபாசிட் ஆனதாக வங்கியில் இருந்து தொலைபேசி வாயிலாக ராஜ்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நண்பருக்கு அனுப்பிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் கடனாக வைத்துக் கொள்ள வங்கி அறிவுறுத்தியுள்ளது. பதிலாக வாகன கடன் வழங்குவதாகவும் வங்கி தரப்பு ராஜ்குமாரிடம் சமரசம் பேசியுள்ளது.

MUST READ