Homeசெய்திகள்சென்னைமீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ இராட்சத சுறா

மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ இராட்சத சுறா

-

மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ இராட்சத சுறா

சென்னை காசிமேட்டில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர் வலையில் 350 கிலோ எடைக்கொண்ட இராட்சத சுறா மீன் ஒன்று சிக்கியது.

மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ இராட்சத சுறா

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர் அருண்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 10பேர் கொண்ட மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது கடலில் மீனவர்கள் விரித்த வலையில் அதிக மீன்கள் சிக்கி இருப்பதாக நினைத்து மீனவர்கள் இழுக்க முடியாமல் வலையை இழுத்தனர்.

பின்னர் அனைவரும் சேர்ந்து வலையை மேலே இழுத்த போது பெரிய அளவிலான சுறாமீன் ஒன்று கிடைத்துள்ளது. பெரிய அளவில் சுறா மீன் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ இராட்சத சுறா

பின்னர் கரைக்கு திரும்பிய மீனவர்கள் அந்த சுறாவை விற்பனைக்காக கொண்டு வந்து எடையை பரிசோதனை செய்தபோது சுமார் 350கிலோ வரை எடைகொண்ட சுறாவாக இருந்துள்ளது. விற்பனை செய்யபட்ட சுறா மீனின் மதிப்பு சுமார் 75000ஆயிரம் வரை இருக்க கூடும் என கூறப்படுகிறது.

 

MUST READ