Homeசெய்திகள்சென்னைஎவரெஸ்ட் சிகரத்தை எட்டிய சென்னை இளைஞர்

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய சென்னை இளைஞர்

-

- Advertisement -

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய சென்னை இளைஞர்

தமிழ்நாட்டு மீனவ இளைஞர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். கண் முன்னே மூன்று மரணங்களை பார்த்த பிறகும் லட்சியத்தை அடைய வேண்டும் என்று தன்னம்பிக்கையோடு பயணம் செய்து சாதனை படைத்துள்ளார் ராஜசேகர் பச்சை முத்து.

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை சென்னை கோவளத்தைச் சேர்ந்த ராஜசேகர் பச்சை முத்து தொட்டிருக்கிறார். அவரை ஊர்மக்கள் சென்னை விமான நிலையத்தில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய சென்னை இளைஞர்
எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய இளைஞர்

சென்னை விமான நிலைய காவல்துறை ஆய்வாளர் பாண்டியன்  ராஜசேகர் பச்சை முத்துவை நேரில் வாழ்த்தினார். நான் கடலில் surfing பண்ணிக்கொண்டு இருந்த பொழுது சில விருதுகளை வாங்கியுள்ளேன். ஆனால் சிலர் உனக்கு கடலை பற்றி அனைத்தும் தெரியும் அதனால் சுலபமாக வெற்றி பெற்றுவிடுகிறாய் எனக் கூறிவந்தனர்.

அப்பொழுது கடலுக்கு எதிராக என்ன உள்ளது என நினைக்கும் பொழுது மலை உள்ளது. என்ன தெரிந்து கொண்டு உலகின் மிக சிகரங்களை பற்றி ஆய்வு செத்துக்கொண்டு இருந்த போது தான் உலகின் மிக உயரமான மலை எவரெஸ்ட் என தெரிந்து கொண்டேன்

பின்னர் தன்னம்பிக்கை கொடுத்து அனுப்பி வைத்தார்கள் எவரெஸ்ட் மலையில் ஏறும் பொழுது கண் முன்னே மூன்று மரணங்கள் நிகழ்ந்தது அப்படியே உட்கார்ந்து விட்டேன் ஆனாலும் எப்படியாவது ஏறிட வேண்டும் என தன்னம்பிக்கையோடு நடந்து சென்றேன்.

பிறகு தான் எவரெஸ்ட் ஏறுவதற்கான முயற்சியை கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கினேன். எவரெஸ்ட் மலையை அடைவது படிப் படியாக தான் ஏற முடியும். 8848 மீட்டர் உயரம் உள்ள மலையை முதலில் 5000மீட்டர் உயரம் உள்ள ஒரு மழையைக் கடந்தேன்

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய சென்னை இளைஞர்
எவரெஸ்ட் சிகரம்

பிறகு 6000-மீட்டர், 6200 மீட்டர்,  6500 மீட்டர் என படிப்படியாக சென்றதால் தான் என்னால் கடக்க முயன்றது. 6500 மீட்டர் மேல் ஆக்சிஜன் அளவு குறைவானதால் அதற்க்கு மேல் ஆக்சிஜன் உதவியுடன் கடக்க ஆரம்பித்தேன்

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய சென்னை இளைஞர்
எவரெஸ்ட்

இந்த வருடம் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி அன்று எவரெஸ்ட் மலையின் அடித்தளமான 5338 மீட்டர் அடைந்தேன். முதலில் 6100 பிறகு 6500, 7100, 8100 என படிப்படியாக சென்று எவரெஸ்ட் மலையை அடைந்தேன் என தெரிவித்தார்.

எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து எனது நண்பர்களுக்காக சில கற்களை கொண்டுவந்துள்ளேன். வீட்டுக்கு வந்ததும் முதலில் என் அம்மா சமைத்த மீன் குழம்பு சுவைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வந்துள்ளேன். தன்னம்பிக்கையோடு இருந்தால் நிச்சயமாக நாம் நினைத்ததை முடிக்க முடியும் என்றார் ராஜசேகர் பச்சைமுத்து.

MUST READ