சென்னை அயனாவரத்தில் பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.ஏ கேட்டகிரி ரவுடியான அறிவழகன் பிடிக்க முயன்ற போது கள்ளத் துப்பாக்கியால் தாக்க முயன்றுள்ளார். ரவுடி அறிவழகன் மீது கொலை உள்ளிட்ட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன.ஆந்திராவில் இருந்து சென்னை வரும் போது தெரிந்து போலீசார் சுற்றி வளைப்பு. தன்னுடைய எதிரணியை சேர்ந்த ரவுடிகள் கொலை செய்து விடுவார்கள் என துப்பாக்கியுடன் வலம் வந்ததாக வாக்குமூலம்.
சென்னை வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்தவர் அறிவழகன்.ஏ பிரிவு ரவுடியன அறிவழகன் திமுக பகுதி செயலாளர் இடிமுரசு இளங்கோ கொலை, அவரது உறவினர் பழனி என்பவரது கொலை உட்பட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.முக்கியமாக கொலை வழக்குகளில் தலைமறைவான அறிவழகன்,
6 வருடமாக காவல்நிலையத்திலும், நீதிமன்றத்திலும் ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்து வந்துள்ளார்.மேலும் ரவுடிகள் தொப்பை கணேஷ், சேது ஆகியோரின் கூட்டாளி ஹரிவழகன்,ரவுடி முத்துசரவணனின் எதிர் அணியை சேர்ந்த ரவுடி ஆவார். தொடர்ந்து தலைமுறைவாக இருந்த ரவுடி அறிவழகன்,பீகாரில் இருந்து 35 ஆயிரம் கள்ளத்துப்பாக்கி வாங்கி வைத்துக்கொண்டு தலைமறைவாக சுற்றி வந்துள்ளார். தனக்கு எதிராக உள்ளவர்கள் தன்னை கொலை செய்து விடலாம் என்ற அச்சத்தில் சுற்றி வந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இருந்து ஆந்திரா வழியாக ரவுடி அறிவழகன் சென்னைக்கு வந்து இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து அறிவழகனை கைது செய்ய தனிப் படை போலீசார் தீவிரமாக செயல்படும்பொழுது அயனாவரம் பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவருடைய அறிவழகனை சுற்றி வளைத்து பிடிக்கும் பொழுது, கையில் வைத்திருக்கும் கள்ள துப்பாக்கியை வைத்து போலிசை தாக்கி தப்ப முயன்று உள்ளார். இதையடுத்து பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளர் பிரேம்குமார் தப்பியோட முயன்ற ரவுடி அறிவழகனை முழங்காலுக்கு கீழே சுட்டு தனிப்படை போலீசார் கைது செய்தனர். அலுவலகனிடமிருந்து ஆறு கிலோ கஞ்சா மற்றும் கள்ளத்துப்பாக்கி பட்டன் கத்தி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து சுடப்பட்ட ரவுடி அறிவழகன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த விவகாரம் குறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.போலீசார் விசாரணையில் பனந்தோப்பு பகுதியில் நண்பர் ஒருவருக்காக காத்திருந்த போது ஹரிவழகனை போலீசார் சுற்றி வளைத்தது தெரியவந்துள்ளது.
கடந்த 2023 ஜூலை மாதம் விழுப்புரம் விக்கிரவாண்டி வீட்டை உடைத்து திருடிய குற்றவாளியை பிராட்வே அருகே சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிப் பிடித்தார்.அப்போது எஸ் ஐ பிரேம் குமாரின் பெயர் பிரபலமான நிலையில், தற்போது ரவுடியை சுட்டு பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .சென்னை அயனாவரத்தில் பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஏ கேட்டகிரி ரவுடியான அறிவழகன் பிடிக்க முயன்ற போது கள்ளத் துப்பாக்கியால் தாக்க முயன்றுள்ளார்.ரவுடி அறிவழகன் மீது கொலை உள்ளிட்ட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆந்திராவில் இருந்து சென்னை வரும் போது தெரிந்து போலீசார் சுற்றி வளைப்பு. தன்னுடைய எதிரணியை சேர்ந்த ரவுடிகள் கொலை செய்து விடுவார்கள் என துப்பாக்கியுடன் வலம் வந்ததாக வாக்குமூலம்.
சென்னை வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்தவர் அறிவழகன். ஏ பிரிவு ரவுடியன அறிவழகன் திமுக பகுதி செயலாளர் இடிமுரசு இளங்கோ கொலை, அவரது உறவினர் பழனி என்பவரது கொலை உட்பட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.முக்கியமாக கொலை வழக்குகளில் தலைமறைவான அறிவழகன், 6 வருடமாக காவல்நிலையத்திலும், நீதிமன்றத்திலும் ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்து வந்துள்ளார்.மேலும் ரவுடிகள் தொப்பை கணேஷ், சேது ஆகியோரின் கூட்டாளி ஹரிவழகன்,ரவுடி முத்துசரவணனின் எதிர் அணியை சேர்ந்த ரவுடி ஆவார்.
தொடர்ந்து தலைமுறைவாக இருந்த ரவுடி அறிவழகன்,பீகாரில் இருந்து 35 ஆயிரம் கள்ளத்துப்பாக்கி வாங்கி வைத்துக்கொண்டு தலைமறைவாக சுற்றி வந்துள்ளார். தனக்கு எதிராக உள்ளவர்கள் தன்னை கொலை செய்து விடலாம் என்ற அச்சத்தில் சுற்றி வந்ததாக தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் இருந்து ஆந்திரா வழியாக ரவுடி அறிவழகன் சென்னைக்கு வந்து இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து அறிவழகனை கைது செய்ய தனிப் படை போலீசார் தீவிரமாக செயல்படும்பொழுது அயனாவரம் பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அறிவழகனை சுற்றி வளைத்து பிடிக்கும் பொழுது, கையில் வைத்திருக்கும் கள்ள துப்பாக்கியை வைத்து போலிசை தாக்கி தப்ப முயன்று உள்ளார். இதையடுத்து பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளர் பிரேம்குமார் தப்பியோட முயன்ற ரவுடி அறிவழகனை முழங்காலுக்கு கீழே சுட்டு தனிப்படை போலீசார் கைது செய்தனர். அலுவலகனிடமிருந்து ஆறு கிலோ கஞ்சா மற்றும் கள்ளத்துப்பாக்கி பட்டன் கத்தி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து சுடப்பட்ட ரவுடி அறிவழகன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த விவகாரம் குறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.போலீசார் விசாரணையில் பனந்தோப்பு பகுதியில் நண்பர் ஒருவருக்காக காத்திருந்த போது ஹரிவழகனை போலீசார் சுற்றி வளைத்தது தெரியவந்துள்ளது.
கடந்த 2023 ஜூலை மாதம் விழுப்புரம் விக்கிரவாண்டி வீட்டை உடைத்து திருடிய குற்றவாளியை பிராட்வே அருகே சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிப் பிடித்தார்.அப்போது எஸ் ஐ பிரேம் குமாரின் பெயர் பிரபலமான நிலையில், தற்போது ரவுடியை சுட்டு பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: வழக்கை பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம்!