ஜூன் மாதம் புதிய விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் மாடுகள் வளர்க்க பட்டு வருகின்றன. போதிய இடம் கூடிய தொழுவம் இல்லாமல் மாடுகளை வளர்பதினால் அவை வீதிகளிலும் சாலைகளிலும் சுற்றி திரிய கூடிய நிலை உள்ளது.இதனால் அவ்வப்போது சாலையில் செல்லும் போது மக்களையும் வாகன ஓட்டிகளையும் மாடுகள் முட்டி தள்ளி அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றது.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு முதல் இரண்டு முறை அபராதமும், மூன்றாவது முறை அதே மாடு மீண்டும் பிடிபட்டால் அந்த மாட்டை பிடித்து மாநகராட்சி தொழுவத்தில் அடைக்ககூடிய விதிகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் சென்னையில் இதுபோன்ற வளர்க்கக்கூடிய மாடுகள் மற்றும் தொழுவங்களை முறைப்படுத்தும் நோக்கில் அனைத்து மண்டலங்களிலும் மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி விரைவில் மாடு வளர்க்கும் தொழுவதிற்கு லைசன்ஸ் பெறுவது கட்டாயம் என்ற விதியை நடைமுறைபடுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மாட்டு தொழுவதற்கு குறைந்தபட்சம் எவ்வளவு சதுர அடி இடம் இருக்க வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மாடு வளர்க்க சில புதிய விதிகள் இணைப்பது குறித்தும் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.இதுகுறித்த விதிகள் இறுதி வடிவம் பெற்றப்பினர், ஜூன் மாதத்தில் இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து லைசன்ஸ் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும் மேலும் தகவல் வெளியாகியுள்ளது.