கல்லூரிக்கு செல்லாததால் கவுன்சிலிங் கொடுக்குமாறு பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் கூறியதால் நேர்ந்த சோகம்
மாங்காடு, பத்மாவதி நகரை சேர்ந்தவர் சௌந்தரராஜன் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார் இவரது மகன் ராஜ்குமார்(25), இவர் திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் தனியார் கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது பெற்றோர் சென்று பார்த்தபோது ராஜ்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்து போன ராஜ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த சில தினங்களாக ராஜ்குமார் கல்லூரிக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும் இதனால் அவரது தாய் கல்லூரிக்கு சென்று கல்லூரி டீனிடம் தனது மகனுக்கு கவுன்சிலிங் கொடுக்குமாறு கூறிவிட்டு வந்ததாகவும் இதையடுத்து ராஜ்குமாரை கல்லூரி டீன் கவுன்சிலிங் எடுத்து கொள்ள வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் சண்டை போட்டதாகவும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல் கட்ட விசாரணை தெரிய வந்துள்ளதாகவும் மேலும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.