Homeசெய்திகள்சென்னைசென்னை முகப்பேரில் காதலை எதிர்த்த தாய்…மகளின் காதலனால் கழுத்து நெரித்து கொலை!

சென்னை முகப்பேரில் காதலை எதிர்த்த தாய்…மகளின் காதலனால் கழுத்து நெரித்து கொலை!

-

- Advertisement -

ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் பெண் அதிகாரி கழுத்தை நெரித்துக்கொலை. மகளின் காதலன் கைது. ஜெ. ஜெ.நகர் போலீசார் நடவடிக்கை. காதலியை திட்டியதால் கொலை செய்ததாக வாக்குமூலம்.

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி மைதிலி( வயது 64). கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த இவரது கணவர் ஜெயக்குமார் கடந்த ஐந்து ஆண்டுகளாக வந்தவாசியில் வசித்து வருகிறார். மகள் ரித்திகாவுடன்(24) மைதிலி வசித்து வந்தார்.

போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரித்திகா பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகரை சேர்ந்தவரும், தன்னுடைய  கல்லூரியில் படித்த  ஜூனியர் மாணவருமான ஷியாம் கண்ணன்(22) என்பவருடன் ரித்திகாவுக்கு காதல் ஏற்பட்டது.

மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஷியாம் கண்ணன் அவ்வபோது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். ஆரம்பத்தில் இருந்து மகளின் காதலுக்கு மைதிலி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில்  வேலைக்கு சென்ற ரித்திகா நேற்று இரவு காலதாமதமாக வந்துள்ளார்.

சென்னை முகப்பேரில் காதலை எதிர்த்த தாய்…மகளின் காதலனால் கழுத்து நெரித்து கொலை!இதை மைதிலி கண்டித்துள்ளார்.  இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ரித்திகா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பிறகு தனது காதலன் ஷியாம் கண்ணனுக்கு போன் செய்து வரவழைத்து அந்த பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார். மகளைத் தேடி ரோட்டுக்கு வந்த மைதிலி, அங்கு ஷியாம் கண்ணனுடன் நின்று பேசிக் கொண்டிருந்த ரித்திகாவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

சென்னை முகப்பேரில் காதலை எதிர்த்த தாய்…மகளின் காதலனால் கழுத்து நெரித்து கொலை!அப்போது ஷியாம் கண்ணனும் வீட்டுக்கு வந்தார். உன்னுடைய நடவடிக்கை சரியில்லை திருத்திக்கொள் என ரித்திகாவை மைதிலி மீண்டும் கண்டித்தார். இதனால், மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. காதலியை திட்டியதால் ஆத்திரமடைந்த ஷியாம் கண்ணன், மைதிலியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்பு அவரே ஜே ஜே நகர் காவல் துறையினரை தொடர்பு கொண்டு  சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். ரித்திகாவிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ