Homeசெய்திகள்சென்னைசென்னையில் போக்குவரத்து  இடையூறாக உள்ள சாலையோர கடைகளை வரிசைப்படுத்தும்  திட்டம்

சென்னையில் போக்குவரத்து  இடையூறாக உள்ள சாலையோர கடைகளை வரிசைப்படுத்தும்  திட்டம்

-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக உள்ள சாலையோர கடைகளை வரிசைப்படுத்தும் நோக்கில் இடங்களை குறிப்பிடும் வகையில் அறிவிப்பு பலகைகள் மற்றும் வண்ணங்கள் தீட்டும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்.

சென்னையில் போக்குவரத்து  இடையூறாக உள்ள சாலையோர கடைகளை வரிசைப்படுத்தும்  திட்டம்சென்னையில் இட நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் சிறிய கடைகள் அடங்கிய நீண்ட தெருக்கள் அதிகமாகி வருகின்றன. இவற்றில் பல உரிய அனுமதி பெற்றும், சில அனுமதி பெறாமலும் இயங்கி வருகின்றன.

இருப்பினும் இதுபோன்ற சிறிய கடை தெருக்கள் ஷாப்பிங் செய்வதற்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது என்று பொதுமக்கள் பலரும் கூறி வருகின்றனர். எனவே இத்தகைய கடை தெருக்களை முறைப்படுத்தி போதிய வசதிகளை செய்து கொடுக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக முதல்கட்டமாக 4 இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

அதில் சென்னையில் மகாகவி பாரதி நகரில் உள்ள வெஸ்ட் அவென்யூ ரோடு, எழும்பூரில் உள்ள பாந்தியன் லேன், அம்பத்தூரில் உள்ள பார்க் ரோடு, பெசன்ட் நகரில் உள்ள செகன்ட் அவென்யூ ஆகிய இடங்களில் முதற்கட்டமாக சாலையோர  கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு நடைபாதைகளுக்கு இடையூறு இன்றி மக்கள் நடந்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அம்பத்தூர் 7வது மண்டலம் 88 மற்றும் 90 ஆகிய வார்டு பகுதிகளில் சாலையோர கடைகளை வரிசை படுத்தும் வகையில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் வண்ணங்கள் அடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து  இடையூறாக உள்ள சாலையோர கடைகளை வரிசைப்படுத்தும்  திட்டம்மேலும் 88வது வார்டில் 50மீ தூரம் வரை 27 கடைகளும் 90வது வார்டில் 60 மீ தூரம் வரை  33 கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு இடங்களை குறிப்பிட்டு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்பின் அனுமதிக்கப்படும் கடைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெறும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ