Homeசெய்திகள்சென்னைசிக்னலுக்காக நின்ற புறநகர் ரயிலில் திடீரென விழுந்து வெடித்த ராக்கெட் பட்டாசு... பயணிகள் அதிர்ச்சி

சிக்னலுக்காக நின்ற புறநகர் ரயிலில் திடீரென விழுந்து வெடித்த ராக்கெட் பட்டாசு… பயணிகள் அதிர்ச்சி

-

சென்னை கொருக்குப்பேட்டையில் சிக்னலுக்காக நின்ற புறநகர் ரயிலின் கடைசி பெட்டியில், திடீரென ராக்கெட் பட்டாசு விழுந்து வெடித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை சென்டரலில் இருந்து இன்று கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. பேசின்பிரிட்ஜ் – கொருக்குப்பேட்டை இடையே அந்த ரயில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது, அருகில் உள்ள பெஜவாட குடிசை பகுதியில் தீபாவளி பண்டிகைக்காக வாங்கிய பட்டாசுகளை சிறுவர்கள் வெடித்து கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்கள் பற்ற வைத்த ராக்கெட் பட்டாசு ஒன்று எதிர்பாராத விதமாக சிக்னலுக்காக நின்றிருந்த புறநகர் ரயிலில் கடைசி பெட்டியின் உள்ளே சென்று வெடித்தது. இதனால் அந்த பெட்டியில இருந்த பயணிகளின் உடைகளில் தீப்பொறி பட்டதில் அவர்கள் அலறினர். இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  ராக்கெட் ரயில் பெட்டியில் புகுந்ததை கண்ட சிறுவர்கள் அங்கிருந்த ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து சிக்னல் கிடைத்ததால் புறநகர் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

MUST READ