பணியை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வண்டலூர் ரயில்வே பிரிட்ஜ் அருகே ரயில் தண்டவளத்தை கடக்கும் பொழுது ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழப்பு.
செங்கல்பட்டில் இருந்து பீச் மார்க்கமாக சென்ற மின்சார ரயிலை கவனிக்காமல் தண்டவளத்தை கடக்கும் போது இருவரும் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலை சேர்ந்தவர்கள் விக்ரம் மற்றும் ஆதிலட்சுமி. இவர்கள் இருவரும் எம். ஆர் .கே இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தவர்கள். கடந்த ஆண்டு EEE முடித்துவிட்டு சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளனர். விக்ரம், பூமா டெக்னாலஜி என்ற கம்பெனியில் ட்ரைனராக பணியாற்றி வந்துள்ளார், ஆதிலட்சுமி கிண்டியில் உள்ள தமிழ் மேட்ரிமோனியில் பணிபுரிந்துள்ளார். இருவரும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து வந்துள்ளனர்.
சம்பவம் நடந்த அன்று (11.02.2025 ) இரவு பணி முடித்துவிட்டு வண்டலூர் ரயில்வே பிரிட்ஜ் அருகே உள்ள ரயில் தண்டவளத்தை கடக்கும் பொழுது செங்கல்பட்டில் இருந்து பீச் மார்க்கமாக சென்ற மின்சார ரயில் வருவதை கவனிக்காமல் இருவரும் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.
இரு வீட்டாருக்கும் தகவல் தெரிவித்த நிலையில் இறந்தவர்களின் உடலை வாங்க காவல் நிலையம் வந்துள்ளனர். மேற்படி இந்த விபத்து சம்பந்தமாக ரயிலை ஓட்டிய கோபாலகிருஷ்ணன் அவரிடம் விசாரித்தபோது அவர்கள் இருவரும் ரயில் வருவதை கவனிக்காமல் ரயில் தண்டவாளத்தை கடந்த சமயம் ரயிலில் அடிப்பட்டு விட்டார்கள் என்றும். அடிபட்டவுடன் ரயிலை 10 நிமிடங்கள் நிறுத்திவிட்டு சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போழுது இருவரும் சம்பவ இடத்திலே இறந்து விட்டனர் என்பது தெரியவந்துள்ளது எனவும் இது தொடர்பாக வண்டலூர் எஸ்.எம்க்கு தகவல் கொடுத்துவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பவம் குறித்து வண்டலூர் எஸ்எம் கொடுத்த புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து இறந்த இரண்டு உடலையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரத விசாரணைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது சம்பந்தமாக இறப்பில் எந்த விதமான சந்தேகமும் இல்லை, இருவரும் ரயிலை கடக்கும்போது தான் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்தில் இறந்து விட்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. வண்டலூர் அருகே ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.