புழல் ஏரியில் கழிவு நீர் கலக்கும் பாதைகளை தடுக்க முயற்சி எடுக்காமல் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக புழல், அராபத் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாய் விளங்கி வரும் புழல் ஏரியில் திருமுல்லைவாயல் பகுதியில் ஆவடி மாநகராட்சியின் கழிவு நீர் நேரடியாக கலப்பதாகவும், ஆகாயதாமரை அதிக அளவில் படிந்திருப்பதால் நீர் மாசடைவதை தடுக்க புழல் ஏரி பாதுகாப்பு சங்கத்தினர் அடிக்கடி ஏரியை தூய்மைப் படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மே மாதம் புழல் ஏரி அராபத் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் மற்றும் எக்ஸ்னோரா இண்டர்நேஷ்னல் இணைந்து நடத்திய புழல் ஏரி தூய்மை பணி நிகழ்ச்சி நடைப்பெற்றது, இதில் முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர், ஆவடி மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டு ஏரியில் கழிவு நீர் கலப்பது உடனடியாக தடுத்து நிறுத்தப்படும் என உறுதியளித்திருந்தனர்.
கடுப்பான அமித்ஷா! எட்டி உதைத்த அண்ணாமலை!
இந்நிலையில் இன்று காலை ஏரியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுப்பட்ட புழல் ஏரி பாதுகாப்பு இயக்கத்தினர் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் எவ்வித தடுப்பு நடவடிக்கையும் தற்போது வரை நடைப்பெறவில்லை குற்றம் சாட்டுகின்றனர். இதே நிலை நீடித்தால் சில ஆண்டுகளில் ஏரி சாக்கடை குட்டையாக மாறும் என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.