சென்னை தண்டையார்பேட்டை வ உ சி நகர் பகுதியில் வடசென்னை அதிமுக சார்பில் மக்களை சந்தித்து தொண்டு பிரசுரங்களை வினியோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அனுமதியில்லாமல் நடைபெறுவதாக காவல்துறை தடுத்ததால் பாதியிலே பிரச்சாரம் நிறுத்தப்பட்டது.
அதிமுகவின் சாதனைகளை கடைக்கடையாக வீடு வீடாக துண்டு பிரசுரம் விநியோகம். 2021ல் 600 ரூபாய் இருந்த ஆட்டு இறைச்சி 900 ரூபாய்க்கு விற்பனைக்கு யார் காரணம் வியாபாரிகளிடம் பிரச்சாரம். வ உ சி நகர் மார்க்கெட் பகுதி ,கடை, காய்கறி கடை , குடியிருப்பு பகுதி என ஒவ்வொரு பகுதியிலும் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் அதிமுகவின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரஙகளை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு பிரச்சாரம் செய்துள்ளனர்.
காய்கறி கடைக்கு சென்ற பொழுது காய்கறிகள் விலை ஏற்றமாக இருப்பதாகவும் 2021 ல் 600 ரூபாய் விற்ற ஆட்டு இறைச்சி தற்பொழுது 2025இல் 900 ரூபாய் விற்பனை செய்வதாக கூறினார். இதனை அடுத்து முறையாக காவல் நிலையத்தில் அனுமதி பெற்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், காவல்துறையினரின் அனுமதி பெறாமல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக போலீசார் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. காவல் துறையினர் தடுத்தால் பிரச்சாம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.