Homeசெய்திகள்சென்னைகாவல்நிலையத்துக்கு நடிகர் பிரபு திடீர் விசிட்

காவல்நிலையத்துக்கு நடிகர் பிரபு திடீர் விசிட்

-

ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற பூக்கடை காவல்நிலையத்துக்கு திடீர் விசிட் அடித்த நடிகர் பிரபு, காவல்துறையினருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

prabhu

சென்னை பூக்கடை காவல் நிலையம் 1867- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த காவல் நிலையத்தின் கட்டிடம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காவல் நிலையம் முழுவதும் வெள்ளை மாளிகை போல் காட்சியளிக்கிறது. காத்திருப்பு அறை, புகார் அளிக்க வருபவர்களுடன் குழந்தைகள் வந்தால் அவர்கள் விளையாடுவதற்கு பொம்மைகள், செயற்கை நீர்வீழ்ச்சி, மூலிகை செடிகள், மான் சிலைகள், சுகாதாரமான குடிநீர் என அனைத்து கட்டமைப்பு வசதிகளும் காவல் நிலையத்தில் உள்ளன. இந்த காவல் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ தர சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

வேறொரு அலுவல் காரணமாக பூக்கடை பகுதிக்குச் சென்ற நடிகர் பிரபு அதை முடித்துவிட்டு பூக்கடை காவல் நிலையத்தை பார்வையிட்டார். ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற காவல் நிலையம் என்னென்ன வசதிகளுடன் இருக்கிறது என பார்வையிட வந்ததாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் பூக்கடை உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு, ஆய்வாளர் தளவாய் சாமி மற்றும் காவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

MUST READ