Homeசெய்திகள்சென்னை"ஆதவ் அர்ஜுனா  கட்சியில்தான் உள்ளார்" - விசிக தலைவர் திருமாவளவன் தகவல்

“ஆதவ் அர்ஜுனா  கட்சியில்தான் உள்ளார்” – விசிக தலைவர் திருமாவளவன் தகவல்

-

ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில்தான் உள்ளதாகவும், அவர் தன்னுடன் தொடர்பில் தான் உள்ளார் என்றும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

thirumavalavan

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-புத்தக நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்ளாதபோது நான் கலந்து கொள்ளலாமா என ஆதவ் அர்ஜுன் என்னிடம் கேட்டார். அதற்கு நான் அனுமதித்தேன். ஆனால் கொஞ்சம் கவனமாக பேச வேண்டுமென கூறி இருந்தேன். அவரே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது ஜனநாயகமும் இல்லை. விசிக அரசியல் கட்சியாக மாற்றப்பட்டபோது தலித் அல்லாதவர்களும், சிறுபான்மையினரும் கட்சியில் இணையலாம் என அழைப்பு விடுத்தோம். அதன்படி அம்பேத்கரையும், பெரியாரையும் ஏற்றுக்கொண்ட பலர் கட்சியில் இணைந்தனர். அந்த வரிசையில் ஆதவ் அர்ஜுனும் ஒருவர்.

எங்கள் கட்சியில் 10 பேருக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அமைப்புச் செயலாளர் பொறுப்பும் 10 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தலித் அல்லாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் உயர்நிலைக்குழுவில் கலந்து ஆலோசித்த பிறகு, அவர் மீதான நடவடிக்கையை ஒரு முறைக்கு இருமுறை விசாரித்து எடுப்போம். ஏனென்றால் தலித் அல்லாதவர்கள் கட்சிக்கு வரும்போது, அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருக்கக் கூடாது.

Aadhav Arjuna - Thirumavalavan

துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருக்கக்கூடிய ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்பொழுது, அதுவும் தலித் அல்லாத ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கும்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்த பிறகு முடிவெடுப்போம். மற்ற கட்சி போல் திமுக, அதிமுக, பாஜகவில் இருப்பது போல நாங்களும் செயல்பட வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல. ஆனால் முடிவை விரைவில் அறிவிப்போம். ஆதவ் அர்ஜுன் கட்சியில்தான் இருக்கிறார். பொறுப்பில் தான் இருக்கிறார். என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார். உயர்நிலைக்குழுவில் பேசியதை நாங்கள் இன்றும் அவரிடம் கூறவில்லை.

அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே மீதான குற்றச்சாட்டு உண்மையல்ல பொய் என்பதனால் நீதிமன்றமே அவரை விடுதலை செய்துள்ளது. அவர் ஐ.ஐ.டி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இடதுசாரி சிந்தனை உள்ளவர். அவர் நீதிமன்ற அனுமதியின் பெயரிலே நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதுமட்டுமில்லாமல் மராட்டியத்தில் அவரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பாஜகவின் அநாகரிக அரசியலை வடக்கே வைத்துக்கொள்ளவும். அவர்களுக்கு திருமாவளவன் குறியல்ல, திமுக கூட்டணிதான் குறி. ஏனென்றால் கடந்த 3 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது, அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதில் ஏதாவது சலசலப்பை கொண்டுவந்து விடலாமோ என்கிற நோக்கில் செயல்படுகின்றனர்.

முதலமைச்சருக்கு நெருக்கமானவருக்கு குற்ற வழக்குகள் துறை இயக்குனராக நியமனம் - அண்ணாமலை கண்டனம்

மதச்சார்பற்ற கூட்டணியில் விசிக்காவும் உண்டு. அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை வருங்காலங்களில். வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே இந்த கூட்டணியை எப்படியாவது சிதறடித்திட வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நோக்கம். அதற்காக விசிக-வை துருப்புச் சீட்டாக பயன்படுத்துகின்றனர். அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம். நாங்கள் ஏற்கனவே இந்திய கூட்டணியில் இருக்கிறோம். எனவே எங்களுக்கு வேறு ஒரு கூட்டணியோ, அணியோ தேவையில்லை. எனவே வேறொரு அணி என்கின்ற சிந்தை இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ