பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மனு!
கடந்த 3 ம் தேதி சென்னை ஜாபர்கான்பேட்டை, கங்கை அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள பெரியார் சிலையை, செருப்பு மாலை அணிவித்து அவமதித்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி அஜய் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிறையில் உள்ள அஜய் ஜாமின் கோரி சென்னை சைதாப்பேட்டை 23வது பெருநகர நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் சார்பில் சைதாப்பேட்டை 23 வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் இடையீட்டு ( Intervene Petition) மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி காவல்துறை பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளார்.