Homeசெய்திகள்சென்னை22 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் எம்.சுப்பிரமணியன் கொலைமிரட்டல் வழக்கில் இன்று தீர்ப்பு

22 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் எம்.சுப்பிரமணியன் கொலைமிரட்டல் வழக்கில் இன்று தீர்ப்பு

-

- Advertisement -

சென்னை மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் தாக்கியதாவும் கொலை மிரட்டல் விடுத்தாகவும்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு. சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்.

22 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் எம்.சுப்பிரமணியன் கொலைமிரட்டல் வழக்கில் இன்று தீர்ப்புவழக்கின் பின்னணி

கடந்த 2002 ஆம் ஆண்டு  அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் அப்போதைய துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக சென்னை கண்ணப்பன் திடல் மீன் அங்காடி டெண்டர் தொடர்பாக பிரச்சினை எழுப்பியது. அப்போது ஆளும் அதிமுக உறுப்பினர்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் மைக், பிளஸ்டிக் நாற்காலி உள்ளிட்ட பொருள்களை கொண்டு அதிமுக உறுப்பினர்களை தாக்கியதாகவும் இதில் அதிமுக மாமன்ற உறுப்பினர்களாக இருந்த ஜீவரத்தினம், பரிமளா, மங்கையர்கரசி, குமாரி, உள்ளிட்ட பலருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும்,

இது தொடர்பாக அதிமுக மன்ற உறுப்பினர்கள் சுகுமார், பாபு மற்றும் மாநகராட்சி மன்ற செயலாளர் ரீட்டா ஆகியோர் சென்னை பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், செல்வி சௌந்தர்யா, கிருஷ்ணகிரி மூர்த்தி ஆகிய ஏழு பேருக்கு எதிராக இரண்டு வழக்குகள் பதிவு செய்யபட்டது. ((சம்பவம் நடைபெறும் போது குற்றஞ்சாட்டப்பட்ட  அனைவரும் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள்.

கலகம் செய்யும் நோக்கில் சட்டவிரோதமாக கூடுதல், சட்டவிரோதமாக ஒருவரை தடுத்துவைத்தால், ஆயுதங்களை கொண்டு தாக்குதல், கொலை மிரட்டல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கில் காவல்துறை குற்றபத்திரிகை தாக்கல் செய்யபட்டது.

 

பின்னர் இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள எம்.பி, மற்றும் எம்.எல்.ஏகள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணைக்கு நடைபெற்றது. காவல்துறை தரப்பில் 70 மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜெயவேல் இன்று வழங்கினார். 22 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கபடவுள்ளது குறிப்பிடதக்கது.

MUST READ