Homeசெய்திகள்சென்னைசேப்பாக்கம் மைதானத்தில் AI தொழில்நுட்பம் - கூடுதல் ஆணையர் ஆய்வு

சேப்பாக்கம் மைதானத்தில் AI தொழில்நுட்பம் – கூடுதல் ஆணையர் ஆய்வு

-

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள AI தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறையை சென்னை மாநகர கூடுதல் ஆணையர் கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தாா். AI தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறை உதவியுடன் செல்போன் திருடர்களை பிடித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளாா்.சேப்பாக்கம் மைதானத்தில் AI தொழில்நுட்பம் - கூடுதல் ஆணையர் ஆய்வுசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் முதன் முறையாக AI தொழில்நுட்பம் மூலம் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதனை பெருநகர சென்னை மாநகர கூடுதல் ஆணையர் கண்ணன், சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார், திருவல்லிக்கேணி மாவட்ட காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன்  ஆகியோர் பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு செய்த பின் பேட்டியளித்த சென்னை மாநகர கூடுதல் ஆணையர் கண்ணன், சென்னை சிங்கம் ஐபிஎல் செயலியை சென்னை காவல் துறை உருவாக்கி இருக்கிறது. இந்த செயலி போட்டி நடக்கும் போது குற்ற நடவடிக்கைகள் நடக்கக்கூடாது என்பதற்காகவும், போட்டி நடைபெறும் போது என்ன நடக்கிறது என கண்காணிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. 40,000 பேர் உள்ளே இருக்கிறார்கள். இவர்களுக்கு ஏதேனும் அசாதாரண சூழல் ஏற்படுகிறதா என்பதையும் கண்காணிக்கிறது.

இதை செயற்கை நுண்ணறிவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை சிங்கம் ஐ பி எல் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யும் போது நீங்கள் என்ன பிரச்சினையை சந்திக்கிறீர்கள் எனக் காட்டும் சம்பவ இடத்திற்கு  காவல்துறையினர் வந்து பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள்.  கடந்த போட்டிகளில் இந்த ஆப் மூலமாக எங்களுக்கு புகார்கள் வந்தது. இந்த செயலின் மூலமாக செல்போன் திருட்டு கும்பலை பிடித்தோம்.

இந்த செயலில் ஏதேனும் பாதுகாப்பு குறைகள் இருந்தாலும் உடனடியாக தெரிந்துவிடும். எங்கேயாவது கூட்டம் இருந்தாலும் தெரியவந்துவிடும். ஏதாவது பிரச்சனை என்றாலும் தெரிந்துவிடும். ஒரு நபரின் புகைப்படத்தை வைத்து அந்த நபரை இந்த AI தொழில்நுட்ப மூலம் இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்தே எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

இந்த தொழில்நுட்பம் இங்கு இருந்து இன்னும் பெரிதுபடுத்தப்படும். திருவிழாக்கள் ஆர்ப்பாட்டங்கள் போன்ற இடங்களில் எல்லாம் இந்த செயலி வரும் காலங்களில் விரிவுபடுத்தப்படும். காவல்துறையினர் சார்பில் 250 கேமராக்கள் அமைக்கப்பட்டு AI தொழில்நுட்பம் மூலம் கண்காணித்து வருகிறோம்.

நல்ல பாம்பை கையில் எடுத்து சுழற்றிய போதை ஆசாமி – அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்

 

MUST READ