பெங்களூரில் பனிமூட்டத்துடன் மோசமான வானிலை நிலவியதால், 154 பயணிகளுடன் டெல்லியில் இருந்து பெங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், பெங்களூரில் தரையிறங்க முடியாமல், சென்னைக்கு திரும்பி வந்தது.
பெங்களூர் விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து, ஏர் இந்தியா பயணிகள் விமானம் 154 பயணிகளுடன், இன்று காலை வந்து கொண்டு இருந்தது. அந்த விமானம் பெங்களூர் விமான நிலையத்தில் தரை இறங்க இருந்த நேரத்தில், அங்கு பனிமூட்டத்துடன், மோசமான வானிலை நிலவியது. இதனால் ஏர் இந்தியா பயணிகள் விமானம், பெங்களூரில் தரை இறங்க முடியாமல், சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 7 மணிக்கு விமானம் வந்து தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டிருந்தனர். வானிலை சீரடைந்ததும் விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு பயணிகளுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம், டீ காபி ஸ்னாக்ஸ் போன்றவைகளை, விமானத்துக்குள் வழங்கினர்.
அதன்பின்பு வானிலை சீரடைந்த பின்பு இன்று காலை 8.30 மணி அளவில், ஏர் இந்தியா விமானம், சென்னையில் இருந்து மீண்டும் பெங்களூர் புறப்பட்டு சென்றது.
கடற்கரை- தாம்பரம் – செங்கல்பட்டு இடையே திங்கள் முதல் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்