Homeசெய்திகள்சென்னைபாஜக உடன் கூட்டணியா..?  4 வார்த்தையில் பட்டென உடைத்த எடப்பாடியார்..!

பாஜக உடன் கூட்டணியா..?  4 வார்த்தையில் பட்டென உடைத்த எடப்பாடியார்..!

-

- Advertisement -

சட்டமன்ற தேர்தலின் போது பாஜக உடன் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு; ஆறு மாதம் கழித்து தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். அதிமுக குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.

பாஜக உடன் கூட்டணியா..?  4 வார்த்தையில் பட்டென உடைத்த எடப்பாடியார்..!அதிமுக பெண்களை பாதுகாக்கும் அரசாங்கமாக இருந்து வந்தது, இன்று தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி செய்து வருகிறது – 2026-ல் பெண்கள் ஆதரவோடு அதிமுக அரசாங்கம் அமையும் – எடப்பாடி பழனிசாமி மேடைப்பேச்சு.

சென்னை இராயபேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அனைத்திந்திய அண்ணா திராவிர முன்னேற்றக் கழக மகளிர் அணியின் சார்பில், “சர்வதேச மகளிர் தினம்” கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கேக் வெட்டி மகளிர்களுக்கு வழங்கினார், அதனைத் தொடர்ந்து நலதிட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி மற்றும் அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா உள்ளிட்ட மகளிர் அணியைச் சார்ந்தவர்கள் நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி மேடைப்பேச்சு, ஜெயலலிதா 15 ஆண்டு காலம் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்தார், அதிமுக ஆட்சிக்காலத்தில் பெண்களை முன்னிலைப்படுத்தி பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தபட்டது. தமிழகத்தில் அதிக ஆண்டு பெண் முதலமைச்சராக ஆட்சி செய்து சாதனை படைத்தது ஜெயலலிதா தான்.

பெண்கள் நாட்டின் கண்கள் என்ற பெருமையோடு போற்றக்கூடியவர். பழங்காலத்தில் பெண்களின் பெருமையை போற்றும்  விதமாக நதிகளுக்கு எல்லாம் பெண்களின் பெயர்தான் சூட்டப்பட்டது.

தமிழகத்தில் பெண்களை முன்னிலைபடுத்தி பெறுமைக் கூறியவர்களாக போற்றபட்டவர்கள். ஜெயலிலாதா பெண் முதலமைச்சராக இருந்த காலத்தில் பெண் சிசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த தொட்டீல் குழந்தை திட்டம்,பெண் பாதுகாப்பு திட்டம் என பல திட்டத்தை கொண்டு வந்தார்.

அதிமுக, பெண்களை பாதுகாக்கும் அரசாங்கமாக இருந்து. ஆனால் இன்றைய தினம் சிறுமி முதல் முதியவர் வரை பாதுகாப்பு இல்லை, பெண்களுக்கு அறவே பாதுகாப்பு இல்லாத செயலற்ற அரசாங்கம் இன்று தமிழகத்தை ஆண்டு கொண்டு இருப்பது வேதனையாக உள்ளது.

2026-ல் பெண்கள் ஆதரவோடு அதிமுக அரசாங்கம் அமையும் என்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலின் போது பாஜக உடன் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில், முன்பே சொல்லிவிட்டேன் ஆறு மாதம் கழித்து தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார்.

முன்னதாக எளிமை தலைவர் எங்கள் முதல்வர் என உலக மகளிர் தின சிறப்பு பாடலை வெளியிட்டார், மகளிர் நலன் காக்க மாற்றம் வேண்டும் என கையெழுத்து இயக்கத்தையும் முதல் கையெழுத்தாக எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டு தொங்கி வைத்தார்.

MUST READ